Saturday 22 June 2013

Skype பயன்படுத்துபவர்களா நீங்கள்!! மிகப்பெரிய அபாயங்கள்



வெளிநாட்டில் இருக்கும் ஒருவருடன் நாம் எளிதில் பேச இன்று பலரும் பயன்படுத்துவது skype network தான் இதில் இருக்கும் ஆபத்துக்கள் உண்மையில் பலருக்கும் தெரிவதில்லை 
Skype நீங்கள் உரையாடுவது பதிவு செய்யப்படுகிறது, மேலும் Skype  இல் இருக்கும் வைரஸ் தான் இணையத்திலேயே மிக கொடுமையான வைரஸ்.

இந்தியாவில் Skype பயன்படுத்துபவர்கள் பெற்று வரும் கெடுதல் விளைவிக்கும் ஸ்பாம் மெயில் குறித்து எச்சரிக்கை கொடுத்தது வந்தது. தற்போது இந்த ஸ்பாம் வேகமாக பரவி வருவதாக அறிவித்துள்ளது.
இந்த வைரஸ் உங்கள் கணிப்பொறியை என்னென்ன செய்யும் என்பதை கீழே பாருங்கள்...அதிர்ந்து போவீர்கள்.





இந்தியாவில் மட்டுமே வேகமாக இது இயங்கி வருகிறது. Skype ஐ பயன்படுத்துவோரின் contact முகவரி எளிதாக அவர்களை சென்றடையும்.
இதில் ஏதேனும் ஒருலிங்க் தரபட்டிருக்கும் அதை கிளிக் செய்தால் கெடுதல் விளைவிக்கும் வைரஸ் ப்ரோகிராம்  உங்கள் கணினியில் வந்து விடும்.

பின்னர் இந்த ப்ரோகிராம் கணினியில் இருக்கும் உங்களுடைய பெர்சனல் தகவல்கள் ,இணையம் தகவல்கள் மற்றும் வங்கி கணக்குகளின் 
யூசர் நேம், பாஸ்வோர்ட் ஐ தொலைவில் இருக்கும் இன்னொரு சர்வருக்கும் அனுப்பி கொண்டே இருக்கும். 
அதனை இயக்குபவர் அங்கிருந்தே உங்கள் கணினியை தன்னுடைய கட்டுபாட்டிற்குள் கொண்டு வரும் வகையில் இந்த வைரஸ் செயல்படும்

இதனை தவிர்க்க Skype காண்டக்ட் முகவரியில் உள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து வரும் இன்ஸ்டன்ட் மெஸ்சேஜ் இல் உள்ள லிங்க் ஐ கிளிக் செய்யாமல் இருக்க வேண்டும் 

No comments:

Post a Comment

 

Blog Template by YummyLolly.com - RSS icons by ComingUpForAir