Monday 3 June 2013

அரபு நாடு பயணிப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை :



மட்டன், சிக்கன் குழம்புகளில் ருசி கூட்ட "கசகசா" (poppy seeds) கொண்டு சென்றதற்க்காக  வளைகுடா நாடுகளில் இந்தியர்கள் கைது செய்யபடுகிறார்கள். இவர்களுக்கு 10 முதல் 20 வருடம் சிறைத்தண்டனை வழங்கபடுகிறது.

சில மாதங்களுக்கு முன்பு வளைகுடாவுக்கு வந்த ஒரு இளைஞர் தனது சம்பளத்தை மிச்சப்படுத்தி வறுமையில் வாடும் தன் குடும்பத்தை காப்பாற்றும் நோக்கில், தானே சமையல் செய்து சாப்பிடும் நோக்கில் மளிகை சாமான்களை கொண்டு போனார். அதனுடன் கசகசா வும் அடங்கும். உடனே அந்த நாட்டு போலிஸ் அவரை சிறையில் அடைத்து விட்டது. அவருக்கு எதற்கு என்றே தெரியவில்லை. இந்திய தூதரக அதிகாரிகளும் உதவிக்கு வரவில்லை. யாராலும் ஒன்னும் செய்யமுடியவில்லை. இன்னும் அந்த இளைஞர் சிறையில் வாடுகிறார்.

இந்த கசகசா செடியில் விதைகள் தாங்கி இருக்கும் பை முற்றி அது முழுவதும்  காய்ந்த பிறகே கச காசா வரும். ஆனால் விதை பை பசுமை நிறத்தில் இருக்கும் போதே அந்த விதை பையை கீறி...அதிலிருந்து வடிகிற பாலை சேகரித்தால் அது தான் "ஓபியம்" என்கிற போதை பொருள்.

No comments:

Post a Comment

 

Blog Template by YummyLolly.com - RSS icons by ComingUpForAir