Wednesday 24 September 2014

Nitaqat System: உங்களது கம்பனியின் நிலை (எந்த வண்ணத்தில் உள்ளது என்பதை) அறிய

Nitaqat System முறையில்  நம்முடைய கம்பனியின் நிலையை (என்ன கலர்) எவ்வாறு ஆன்லைனில் பரிசோதிப்பது என்று நண்பர் ஒருவர் கேட்டார். நான் அவருக்கு அந்த இணைய முகவரியை கொடுத்தேன் அதற்க்கு அவர் அது முழுவதும் அரபியில் உள்ளது, எவ்வாறு பார்ப்பது? என்றார்.அவருக்காக இந்த பதிவு.
 
முதலில் கீழே உள்ள இணைய முகவரி செல்லவும்

இணைய முகவரி செல்ல இங்கே சொடக்கவும்

கீழேயுள்ள படத்தை பார்த்து தேவையான தகவல்களை கொடுக்கவும். உங்களது இக்காமா எண்ணை கொடுத்து, சொந்த நாட்டின் பெயரை கொடுக்கவும்.





எப்போது உங்களது கம்பனி இப்பொழுது என்ன வண்ணத்தில் உள்ளது என்பதை எளிதாக அறியலாம்.






Nitaqat System பற்றிய சிறு விளக்கம்:
Nitaqat System என்பது Naturalization Law ஆகும். அதாவது உள்நாட்டு வேலை வாய்ப்பில் சவூதி நாட்டவருக்கும்  பங்களிப்பை வழங்குதல் அதாவது 10% ஒதுக்குவதாகும்.

இந்த Nitaqat System தொழிலாளர் சந்தையில் 41 வகையான தொழில்களை (ரியல் எஸ்டேட், கட்டுமானம், ஹோட்டல் etc...) கட்டுப்படுத்துகிறது. இவ்வகையான தொழில்களை அளவின் அடிப்படையில் அதாவது மிகப்பெரிய அளவு, பெரிய அளவு, நடுத்தர அளவு, சிறிய அளவு மற்றும் மிகச்சிறிய அளவு என 5 அளவுகளில் சுருக்கி 205 பிரிவுகளாக பிரிக்கின்றனர். 41 x 5 = 205.

இவ்வகையான தொழில்களில் 10% வேலை வாய்ப்பை சவுதியினருக்கு ஒதுக்க வேண்டும். அவ்வாறு ஒதுக்கவில்லை என்றால் நிறுவனத்தை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்படும்.



இவ்வாறு சவூதி நபர்களை வேலைக்கு அமர்த்துவதன் அடிப்படையில் கம்பனியின் நிலையை பல வண்ணங்களாக பிரிக்கின்றனர். அதாவது  ஊதா கலர், பச்சை கலர், மஞ்சள் மற்றும் சிகப்பு கலர். ஊதாகலர் கம்பனியானது மிகவும் நல்ல நிலையில் இருக்கும் கம்பனி ஆகும், சிகப்பு கலர் கம்பனி நிலைமை ரொம்ப மோசமானதாக உள்ளதாகும்.





Saturday 6 September 2014

சவூதி அரசு அமைத்துள்ள குறைந்த கட்டண ஹஜ்ஜ் சேவை:



சவூதி நாட்டினர் மற்றும் அங்கு பணிபுரியும் வெளி நாட்டினர் இவ்வருடம் எளிதாக ஹஜ்ஜ் செய்ய சவூதி ஹஜ்ஜ் அமைச்சகம் குறைந்த கட்டணத்தில் ஏற்பாடு செய்துள்ளது.

கடந்த காலங்களில் ஹஜ்ஜ் வேண்டுமெனில் பெரும்பாலோர் தனியார் டிராவல் ஏஜென்சியை நாடி அவர்கள் கேட்ட பணத்தை கொடுத்து ஹஜ்ஜ் பேப்பர் தயார் செய்து பின்னர் ஹஜ்ஜ் செய்ய முற்படுவர். அதுவும் தனியார் டிராவல் நிறுவனம் இதற்க்கு அதிக பணம் வசூலித்து வந்தனர். இன்னும் பெரும்பாலான நிறுவனங்கள் போலியானவை. அவர்கள் மறைமுகமாக அதிக கட்டணம் வசூலித்து அரசு நிர்ணயித்த அளவை விட அதிகமான நபர்களை ஹஜ்ஜிக்கு அனுப்பி வந்தனர். மேலும் தரமான போக்குவரத்து வசதியோ , தரமான உணவோ அல்லது தரமான தங்குமிட வசதியோ கொடுப்பது கிடையாது. இதனால் ஹஜ்ஜ் நேரங்களில் அரசாங்கத்திற்கு அதிக வேலை பளுவை ஏற்படுத்தியது. இதனை கருத்தில்கொண்டு இவ்வருடம் அரசாங்கமே களத்தில் இறங்கியது.
அதாவது அரசானை எண்: M/58 (28.10.1426) சவூதி ஹஜ்ஜ் அமைச்சகத்தின் புதிய இணையதள மூலம் ஹஜ்ஜ் செல்பவர்கள் தங்களது விபரங்களை அளித்து பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும்  இணையதள மூலம் பணம் செலுத்தி எளிதாக ஹஜ்ஜ் அனுமதியை பெறலாம்.

கடந்த ஆண்டு ஹஜ்ஜ் செய்ய 19,000 பேர் அனுமதி பெற்றனர். இவ்வருடம் 41,000 பேர் ஹஜ்ஜ் செய்ய இத்திட்டத்தின் மூலம் அனுமதி வழங்கபட்டுள்ளது.
கீழ்க்கண்ட இணைய தளம் மூலம் தங்களது பெயரை பதிவு செய்து 48 மணி நேரத்தில் அதற்குறிய பணத்தை செலுத்தி உறுதி செய்து கொள்ளவும்.



இணைய தளம் செல்ல இங்கே சொடக்கவும்  

இத்திட்டத்தின் நிபந்தனைகள்:
1) இதற்க்கு முன் ஹஜ்ஜ் செய்து இருந்தால் அதன் காலம் 5 ஆண்டுகள் ஆகி இருக்க வேண்டும்
2) 15 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி
3) ஒருவர் ஆன்லைன் மூலம் 10 பேர் வரைக்கும் பதிவு செய்ய மட்டுமே அனுமதி.

வழங்கும் சேவைகள்:
போக்குவரத்து வாகன வசதி, உணவு மற்றும் தங்குமிட வசதி செய்து தரப்படும்.

கட்டண விகிதம்:
பஸ்: 5000, 4800, 4400, 4150, 3600, 3100, 2500
ரயில்: 5250, 5050, 4650, 4400, 3850, 3350, 2750

தங்களுடைய பயண விபரங்களை பற்றி மேலும் அறிய 19998 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.

 

Blog Template by YummyLolly.com - RSS icons by ComingUpForAir