Sunday 16 June 2013

ஆளுமையின் ரகசியங்கள்!!


ஆளுமையின் ரகசியங்கள்!! Secrets of personality ..!

மனிதர்களை வசப்படுத்தும் கலையைக் கற்றுக்கொள்ளுங்கள். இங்கே வசப்படுத்துவது என்பது வசியப்படுத்துவது அல்ல.

வெற்றி பெற்றே தீர வேண்டும் என்று ஒருவன் தீர்மானித்தால், அவன் மனிதர்களை வசப்படுத்தும் கலையை நிச்சயம் அறிந்து கொள்ள வேண்டும்.  அதை நடைமுறையில் கொண்டுவர வேண்டும்.  ஏனேனில் நாம் மனிதர்களுடன்தான் கூடி வாழ்கிறோம்.  அனைவரையும் வசப்படுத்தி, நமது காரியங்களை சாதித்துக்கொள்ள வேண்டும்.

நாம் எண்ணிய மாதிரி மற்றவர்கள் நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்போம்.. அதே மாதிரி தானே அவர்களும் நம்மிடம் எதிர்பார்ப்பார்கள் என்பதை ஏனோ நாம் அறிவதில்லை.

ஆகவே, அடுத்தவரை நமக்காக காரியங்களைச் செய்யத் தூண்டிவிடவும், நாம் அவரைக் கொண்டு நமது காரியங்களைச் செய்து கொள்ளவும், நமக்கு மனிதர்களை வசப்படுத்தும் முறை தெரிய வேண்டும். அப்போதுதான் மற்றவர் நமக்காக, நமது காரியங்களை மகிழ்வுடன் முடித்துக் கொடுப்பர்.

"
மனிதர்களை நடத்தும் திறமை மட்டும் மளிகைக்கடையில் வாங்கும் பொருள்களைப் போல இருந்தால், வேறெந்த பொருளையும்விட, அந்தத் திறமையை கடையில் அதிக விலை கொடுத்து வாங்குவேன்" என்கிறார் அமெரிக்காவில் கோடீஸ்வரராக இருந்த ராக்பெல்லர் அவர்கள். பெரும் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் எல்லாம் இந்த கலையில் சிறந்தவர்களையே பெரும் சம்பளம் கொடுத்து வேலைக்கு வைத்து கொள்கின்றன. இவரை ஆங்கிலத்தில் HR(Human resources) என்று சுருக்கமாக குறிப்பிடுவார்கள்.

மனிதர்களை கையாளும் வழி முறைகள் :

1.
ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் அதிக ஆழமாக பதிந்துள்ளது என்னவென்றால், "தான்தான் முக்கியமானவம்" என்ற எண்ணம்தான்.  பிறர் தன்னை மதித்துப் போற்ற வேண்டும். என அனைவருமே அடிப்படையாக எதிர்ப்பார்க்கின்றனர்.  இதையே 'Ego' என்று அழைக்கின்றனர். அதற்கு சிறந்த வழி அவரகளைப் பாராட்டுவதுதான். அவனது 'Ego' வை திருப்தி செய்து விட்டோம் என்றால் அவன் நமக்கு உதவிகள் செய்ய பறந்து வருவான். இங்கே நன்றாக ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். முகஸ்துதி என்பது செய்வது வேறு. பாராட்டுவது என்பது வேறு.

2.
அடுத்தவரை குறை கூறுவதை தவிரக்க வேண்டும். தன்னை குறை கூறுவது எவருக்கும் பிடிக்காது.  ஏன் நமக்கும்தான். நாம் பிறரைப் பற்றிப்பேசும்வதென்றால், அவரைப்பற்றி நல்ல குணங்களையே தான் பேச வேண்டும். தவிர குறைகளைப் பேசுவதால் பகை தான் மிஞ்சும். இதனால் எந்த ஒரு பலனும் இல்லை.

நம்மை இவர் குறைப்படுத்தி பேசுகின்றார் என்று மற்றவர் அறிந்தால் அவர் ஒருபோதும் இவருக்கு ஒத்துழைப்பும், ஆதரவும் தரவே மாட்டார் என்பதை நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.  பிறரை குறை கூறுவது முட்டாள் தனமே என்று புரிந்துகொள்வதே மற்றவர்களை கவர்வதில் முக்கியமான ஒன்றாகும்.

3.
முடிந்த வரை மற்றவர்களை,  கிடைக்கும் சந்தர்ப்பங்களில் பாராட்டுங்கள்.! 
  • உங்கள் மனைவியைப் பாராட்டிப் பாருங்கள்..! இல்லறம் இனிக்கும்!
  •  உங்கள் குழந்தைகளை பாராட்டிப் பாருங்கள்..!! அவர்களின் செயல்களில் முன்னேற்றத்தை காணலாம்.
  • நண்பனைப் பாராட்டிப் பாருங்கள்.. அவன் நமக்காக எதுவும் செய்ய முற்படுவான்.
  • தொழிளாலரைப் பாராட்டுங்கள்.. தொழிலில் பெரும் வெற்றி பெறலாம்.!!

எனவே சின்ன விஷயங்களானாலும் பாரட்டக் கற்றுக்கொள்ளுங்கள்..!! பாராட்டுவதில் சிக்கனம் கடைப்பிடிக்காதீர்கள்.. மனிதர்களிடம் நிறைகளை மட்டுமே கண்டுபிடித்து பாராட்டுங்கள்.. அதுவே அவர்கள் தவறு செய்யாமல் இருக்க வழிவகுக்கும். அதுவே வெற்றியின் மூலதனம். அதுவே ஆளுமையின் ரகசியம்.!!

No comments:

Post a Comment

 

Blog Template by YummyLolly.com - RSS icons by ComingUpForAir