Friday, 7 June 2013

அமெரிக்காவில் தமிழன் ஓட்டிய கார் :

ஒரு தமிழன் அமெரிக்காவின் ஒரு பிரபல வீதியில் காரை ஓட்டி சென்றுகொண்டிருந்தான் .... அப்பொழுது அவன் தனது காரின் கண்ணாடியில் பார்த்தான்....அவனை போலிஸ் கார் ஓன்று பின்தொடர்வது தெரிந்தது. அவனும் எதுவும் அறியாதது போல் காரை ஓட்டினான். அந்த போலிஸ் காரும் அவனை தொடர்ந்து கொண்டே சென்றது.

அரை மணி நேரத்திற்கு பிறகு போலிஸ் கார் அவனை ஓவர் டேக் செய்து அவனுடைய காருக்கு முன் நின்றது. அவனும் காரை நிறுத்தினான். காரிலிருந்து போலீஸ்காரர் இறங்கி வந்து அவனிடம் " குட்மானிங் சார் " என்றார். இவன்  போலிஸ்காரரிடம் "உங்களுக்கு என்ன வேண்டும்? " என்றான்.

போலீஸ்காரர் " சார் நான் உங்கள் காரை அரை மணி நேரம் பாலோ செய்தேன். நீங்கள் கார் ஓட்டும்போது பின்னாடி வரும் காருக்கு வழி விடுவதும், சாலை விதிகளை மதித்து மிதமான வேகத்தில் சென்றதும், சிக்னல்களில் நின்று சென்ற விதம் அனைத்தும் எங்களுக்கு பிடித்து இருந்தது." அதற்க்கு தமிழன் "அதற்க்கு என்ன இப்போ? " போலீஸ்காரர் " சார் இன்னைக்கு "சாலை பாதுகாப்பு தினம்" அதற்காக உங்களுக்கு நான் பரிசாக 5000டாலர் பணம் தர இருக்கிறேன் என்றார் போலீஸ்காரர்.

உடனே அவன் "இந்த பணத்தை  வச்சி எப்படியாவது லைசென்ஸ் எடுக்கவேண்டும் என்றான்..  "

போலிஸ்: "??"

 அவனுக்கு அருகில் உட்கார்ந்து இருந்த அவனுடைய மனைவி " சார் தப்பா நினைக்காதிங்க ...அவரு குடிச்சிட்டு உளறுறாரு " என்றாள்.

காருக்கு பின்னாடி இருந்த காது செவிடான அவனுடைய வயதான அம்மா சொன்னார் "இதற்க்கு தான் நான் அப்பவே சொன்னேன் .. திருட்டு காரை எடுத்துட்டு வராதேனு .. இப்ப பாரு போலிஸ்காரங்க புடிச்சிட்டாங்க"

போலிஸ் " ? ? ? ?"


Monday, 3 June 2013

அரபு நாடு பயணிப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை :



மட்டன், சிக்கன் குழம்புகளில் ருசி கூட்ட "கசகசா" (poppy seeds) கொண்டு சென்றதற்க்காக  வளைகுடா நாடுகளில் இந்தியர்கள் கைது செய்யபடுகிறார்கள். இவர்களுக்கு 10 முதல் 20 வருடம் சிறைத்தண்டனை வழங்கபடுகிறது.

சில மாதங்களுக்கு முன்பு வளைகுடாவுக்கு வந்த ஒரு இளைஞர் தனது சம்பளத்தை மிச்சப்படுத்தி வறுமையில் வாடும் தன் குடும்பத்தை காப்பாற்றும் நோக்கில், தானே சமையல் செய்து சாப்பிடும் நோக்கில் மளிகை சாமான்களை கொண்டு போனார். அதனுடன் கசகசா வும் அடங்கும். உடனே அந்த நாட்டு போலிஸ் அவரை சிறையில் அடைத்து விட்டது. அவருக்கு எதற்கு என்றே தெரியவில்லை. இந்திய தூதரக அதிகாரிகளும் உதவிக்கு வரவில்லை. யாராலும் ஒன்னும் செய்யமுடியவில்லை. இன்னும் அந்த இளைஞர் சிறையில் வாடுகிறார்.

இந்த கசகசா செடியில் விதைகள் தாங்கி இருக்கும் பை முற்றி அது முழுவதும்  காய்ந்த பிறகே கச காசா வரும். ஆனால் விதை பை பசுமை நிறத்தில் இருக்கும் போதே அந்த விதை பையை கீறி...அதிலிருந்து வடிகிற பாலை சேகரித்தால் அது தான் "ஓபியம்" என்கிற போதை பொருள்.

பவர் கட்டானாலும் மொபைலில் சார்ஜ் போட முடியும்:



தமிழ் நாட்டில் பவர் கட்டால் மொபைல் சார்ஜ் போட முடியாதவர்களுக்கு இது உதவும். இனி உங்களிடம் லேண்ட்லைன் கனேக்சன் இருந்தால் போதும் எளிதாக மொபைல் சார்ஜ் செய்யலாம்.

இது மிக எளிதான வழியும் கூட, இதற்கு தேவையானது, இரண்டு USB கேபிள்கள்,லேண்ட்லைன் கனேக்சன்,வோல்டேஜ் மீட்டர்,மல்டி மீட்டர் இருந்தால் போதுமானது. முதலில் USB கேபிள்களை லேண்ட்லைன் பின்னில் ஒரு முனையையும், மற்றொரு முனையை எடுத்து 5V வருகிறதா என்று செக் செய்யவும். பின்பு மொபைலில் ஒரு முனையையும் லேண்ட்லைன் கேபிளில் இருக்கும் மற்றொரு முனையையும் கனெக்ட் செய்யவும். இப்பொழுது உங்கள் மொபைலில் சார்ஜ் கண்டிப்பாக ஏறும்.


மனைவியின் கேள்வி

நடு இரவில் மனைவி திடிர்னு கணவனிடம் 


" ஏங்க என் மேல உண்மையிலேயே நீங்க பாசம் வச்சிருக்கிங்களா?" 
" மணி ரெண்டாகுது... இந்த அர்த்தஜாமத்தில், உனக்கு ஏண்டி இந்த சந்தேகம்?"
"கேட்டதக்கு பதில் சொல்லுங்க?"

பக்கத்தில் உறங்கும் மூன்று குழந்தைகளை காட்டி கணவன் சொன்னான்....

"இதெல்லாம் பின்ன கூகுளில் இருந்தா டவுன் லோட் செஞ்சேன் ?"

மனைவி வளர்த்த பூனை:


ஒரு கணவனுக்கு அவன் மனைவி வளர்த்த பூனையை கண்டாலே பிடிக்காது. அதை எப்படியாவது விரட்டிவிட வேண்டும் என்று நினைத்தான்.

ஒரு நாள் அப்பூனையை தூக்கிக்கொண்டு இருபது வீடு தாண்டி விட்டு விட்டு  வந்தான். 
வீட்டிற்கு வந்தால்... பூனை வாசலில் நின்று கொண்டுருந்தது. வெறுப்படைந்த அவன் அந்த  அந்த பூனையை அடுத்த தெருவில் விட்டு விட்டு வந்தான்.

அன்றும் அந்த பூனை அவனுக்காக வீட்டில் காத்துக்கொண்டு இருந்தது.
வெறுப்படைந்த அவன் அந்த பூனையை காரில் ஏற்றிக்கொண்டு வலது புறம், இடது புறம் என மாறி மாறி நீண்ட தூரம் சென்று பூனையை விட்டு வந்தான்.

சிறிது நேரம் கழித்து மனைவிக்கு போன் செய்தான். மனைவியிடம் " உன்னுடைய பூனை விட்டிற்கு வந்து விட்டதா?" என கேட்டான். மனைவி " ஆம்" என்று சொன்னாள்.   


 உடனே கணவன் " போனை பூனைக்கிட்ட கொடு, எனக்கு வீட்டுக்கு வர வழி தெரியவில்லை " என்றான்.
 

Blog Template by YummyLolly.com - RSS icons by ComingUpForAir