Saturday, 19 October 2024
Thursday, 6 December 2018
தொலை தொடர்பு நிருவனங்களின் ரூ 35/- மினிமம் பேலன்ஸ் கட்டாயம்:
Airtel, Idea & Vodafone போன்ற தொலை தொடர்பு நிறுவனங்கள் தங்களது சேவையை பயன்படுத்த வேண்டும் என்றால் மாதா மாதம் குறைநதபட்ச ரீச்சார்ஜ் ரூ 35/- கண்டிப்பாக செய்ய வேண்டும் என அறிவிப்பு விடுத்துள்ளனர். நீங்கள் பேசினாலும் அல்லது பேசா விட்டாலும் அந்த தொகை 30 நாள் கழித்து முழுவதும் கழிக்கப்பட்டு விடும்.
இதனால் பலரும் ஒரு குழப்பத்தில் உள்ளனர். இதற்க்கு காரணம் பலரும் ஒன்றுக்கு மேற்ப்பட்ட சிம் கார்டுகளை பயன்படுத்துவதால் தான். JIO நிறுவனம் வந்த பின்னர் அனைவரிடமும் ஜியெ சிம் இலவச கால் மற்றும் இணையதள பயன்பாட்டிற்க்காகவும், தங்களுடைய பழைய சிம்மை இன் கமிங்க் கால்களுக்காக மட்டுமே பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர். இதனால் பழைய சிம்மிற்க்கான ரீசார்ஜ் வெகுவாக குறைய ஆரம்பித்தது இதனால் அந்த நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்தது. இதனால் இவ்வகையான மாற்றத்தை இந்த மூன்று நிறுவனங்களும் கொண்டு வந்தன.
இதற்க்கு என்னா தான் தீர்வு என யோசிக்கும் பொது...
1) நீங்கள் Airtel, Idea & Vodafone வாடிக்கையாளராக இருந்து அதனையே கால் களுக்காகவும் இணையத்திற்க்காகவும் ரீசார்ஜ் செய்து பயன்படுத்தி வந்தால் இதில் எந்த ஒரு குழப்பமும் இல்லை.அதை தொடர்ந்து பயன் படுத்தி வரலாம்.
2) இண்கமிங்க் கால்களுக்காக மட்டுமே Airtel, Idea & Vodafone சிம் வைத்துள்ளேன் அனைவரிடமும் இந்த நம்பர் தான் கொடுத்துள்ளேன் மற்ற படி ஜியோ தான் இலவச கால் மற்றும் இணையத்தளத்திற்க்காவும் வைத்துள்ளேன் மேலும் பழைய நம்பரை தவிர்க்க முடியாது என்று எண்ணினாலும் நீங்கள் செய்ய வேண்டியது உங்களுடைய பழைய நம்பரை BSNL அல்லது JIO நெட் வொர்க்கிற்கு மாற்றி விடுங்கள். இவ்விரண்டு நிறுவங்களும் லைப் டைம் வேலிடிடி கொடுப்பவை.இண்கமின்க்காக ரீசார்ஜ் எதுவும் செய்ய தேவையில்லை. இவ்விரண்டில் BSNL மிகவும் நல்லது ஏனொனில் அது அரசாங்க நிறுவனம், உங்க ஊரில் BSNL டவர் பிரச்சனை என்றால் JIO வுக்கு மாறி விடுங்கள்.
இதில் அதிகம் பாதிக்கப்படுவது நம்முடைய அப்பா அம்மா தாத்தா பாட்டி தான் ஏனென்றால் அவர்கள் அந்த நம்பரை இங்கமின் கால்,வங்கி கணக்கு, கெஸ் புக்கிங் மற்றும் ரெசன் கார்டுகளுக்கு மட்டுமெ பயன்படுத்துவார்கள் இனிமேல் அவர்கள் மாதாமாதம் ரீசர்ஜ் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் ஆகையால் அவர்களுது நம்பரை வேறு ஒரு நெட் வொர்க்கிற்க்கு மாற்றி விடுங்கள்.
நீங்கள் எளிதாக வேறு ஒரு நெட் ஒர்க்கிற்க்கு மாறலாம். நீங்கள் செய்ய வெண்டியது எந்த நெட் ஒர்க்கிற்க்கு மாற போகிறீங்களோ (Airtel, Idea & Vodafone) அந்த நிறுவன CUSTOMER CARE அலுவலகம் சென்று மாற்றிக்கொள்ளலாம்.
AIRTEL UNLIMITED
VODAFONE UNLIMITED
IDEA UNLIMITED
Sunday, 2 December 2018
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பிட்டுத் திட்டம்:
இத்திட்டத்தின் நோக்கம் தமிழகத்தில் வாழும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தரமான அறுவை சிகிச்சை மற்றும் பொது மருத்துவ சிகிச்சையை எளிதாகவும் இலவசமாக பெருவதாகும் இதனை அனைத்து வகையான அரசாங்க மருத்துவமனைகள் மற்றும் சில பதிவு செய்யப்பட்ட தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சைகள் பெறலாம்.
காப்பீடு அட்டை பெற தகுதி:
குடும்ப ஆண்டு வருமானம் 72000 த்திற்குள் இருக்க வேண்டும்.
குடும்பத்தில் யார் யார் எல்லாம் பயன் பெறலாம்:
குடும்ப அட்டையில் உள்ள கணவன் மனைவி பிள்ளைகள் மற்றும் தாய் தந்தை அடங்கும் அனைவரது பெயர்களும் குடும்ப அட்டையில் இருக்க வேண்டும்
தேவையான ஆவணங்கள்:
1. குடும்ப அட்டை
2. ஆண்டு வருமான சான்றிதழ்
மருத்துவ காப்பீட்டு அட்டை பெற :
கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து வருமான சான்றிதழ் பெற வேண்டும் அது ரூ 72000 த்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்
பின்னர் குடும்ப அட்டை மற்றும் ஆண்டு வருமான சான்றிதழ் ஆகியவற்றை கொண்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் செயல்படும் முதலமைச்சர் விரிவான காப்பீடு திட்ட மையத்திற்க்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும் அங்கு போட்டோ எடுத்துக் கொள்ளப்படும் பின்னர் குறிப்பிட்ட நாட்கள் கழித்து இம்மருத்துவ அட்டை கிடைக்கப்பெறும்.
அட்டையில் காணப்படும் விபரங்கள்
குடும்ப தலைவர் மற்றும் உறுப்பினரகளின் புகைப்படங்கள் இடம் பெற்றிருக்கும்
2 வயதிற்கு மேற்பட்ட உறுப்பினர்களின் கைரேகை பதிவு செய்யபட்டு இருக்கும்.
எவ்வாறு சிகிச்சை பெறுவது:
அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைக்கு சென்று அங்குள்ள காப்பீட்டு திட்ட அலுவலரை தொடர்பு கொண்டு நம்மிடம் உள்ள மருத்துவ அடையாள அட்டை,குடும்ப அட்டை மற்றும் வருமான சான்றிதழ்களை காண்பித்து மருத்துவ சிகிச்சை பெற முடியும்.
மருத்துவ சிகிச்சை பெற அதிக பட்ச தொகை:
இத்திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற ஒரு குடும்பத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு 1 லட்சம் முதல் நான்கு ஆண்டுக்கு நான்கு லட்சம் வரை சிகிச்சை பெற முடியும். இத்திட்டத்தில் சிறிய குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கட்டணம் இன்றி சிகிச்சை பெற முடியும். மருத்துவ மனைகள் இக்கட்டணத்தை காப்பீடு நிறுவனகள் மூலம் பெற்றுக்கொள்ளும்.
இந்த அட்டையின் மூலம் 1027 மருத்துவ சிகிச்சை முறைகள் மற்றும் 154 தொடர் சிகிச்சை வழிமுறைகள் மேலும் 38 அறிதல் கண்டுபிடிப்புகளுக்கும் வழி வகை செய்யப்பட்டுள்ளது இதில் 8 உயர் சிகிச்சை முறைகள் உள்ளன.
அவை இதயம் மாற்று அறுவை சிகிச்சை, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை,சிறு நீரக மாற்று அறுவை சிகிச்சை, எலும்பு மஞ்சை மாற்று அறுவை சிகிச்சை, உட் செவி சுருள் பொருத்துதல்,
செவி திறன் மூளை தண்டு கருவி பொருத்துதல்
ஆகியஆகும்
38 வகையான சிகிச்சை பரிசோதனைகள்:
ECHO , USG , MRI , MRCP, CT , MAMMOGRAPHY , LFT , RFT ,
ANGIOCARDIOGRAM , THYROID PROFILE ETC .
இந்த அட்டையின் கால அளவு குடும்பத்திற்கு ஆண்டு க்கு 1 லட்சம் வரைக்கும் சிகிச்சை அளிக்கக்படுகிறது மேலும் மீதி உள்ள உறுதி செய்யபட்ட தொகையயை பொறுத்து பயன்படுத்தலாம் அதன் தொகை தீரும் வரை பயன்படுத்தி கொள்ளலாம்.
மேலும் இது குறித்து தகவல்கள் பெற அருகில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் செயல்படும் முதல் அமைச்சர் மருத்துவ காப்பீடு திட்ட அலுவலகத்தை அணுகலாம் அல்லது கீழ் உள்ள இனைய தளத்திற்க்கு செல்லவும்.
https://www.cmchistn.com/
மேலும் இது குறித்து தகவல்கள் பெற அருகில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் செயல்படும் முதல் அமைச்சர் மருத்துவ காப்பீடு திட்ட அலுவலகத்தை அணுகலாம் அல்லது கீழ் உள்ள இனைய தளத்திற்க்கு செல்லவும்.
https://www.cmchistn.com/
கட்டணம் இன்றி தொலைபேசியில் தொடர்பு கொள்ள 1800 425 3993 என்ற எண்ணை பயன்படுத்தலாம்.
Tuesday, 16 February 2016
(சவூதி) விசா பற்றிய தகவல்களை ஆன்லைன் மூலம் அறிய (Mofa no.)
நீங்கள் புதியதாக விசா கிடைத்து சவூதி செல்ல இருக்கிறிற்களா? உங்கள் விசா பற்றிய முழு விபரம் தெரிய வேண்டுமா? விசாவில் என்ன வேலை குறிப்பிட்டுள்ளது? யார் பெயரில் விசா வழங்கப்பட்டுள்ளது, எந்த தேதியில் விசா வழங்கப்பட்டது? முகவரி மற்றும் முதாலாளியின் பெயர் போன்றவை பற்றி அறிய வேண்டுமா? சவூதி அரசின் விசா mofa இணையத்தளத்திற்க்குச் சென்று விசாவிற்க்கான விபரத்தை அறியலாம். இதற்க்கு முக்கியமாக mofa (Ministry of foreign Affairs) எண் அல்லது விண்ணப்ப எண் தேவை.
கீழ் காணும் இனணய முகவரிக்குச் சென்று உங்களது விசா எண் மற்றும் ID எண் கொடுத்தால் போதும் உங்களது விசா பற்றிய முழு விபரமும் அறியலாம்.
இணையம் செல்ல இங்கே சொடக்கவும்
உங்களது விசா விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டு விசா விற்க்கான பணம் மற்றும் மெடிக்கல் பணம் கட்டிய பிறகு registered agency மூலம் இணையத்தில் இந்த mofa எண் பதிவேற்றம் செய்யப்படும். ஆகையால் மெடிக்கல் முடிந்த பிறகே இந்த mofa எண் கிடைக்கும். நீங்கள் அந்த விசா எண்ணையும் ஐ டி எண்ணையும் கொடுத்தப் பின்னர் கீழே உள்ள படி விசா பற்றிய விபரம் கிடைக்கும்.
மேலும் விபரம் அறிய:
கீழ் காணும் இனணய முகவரிக்குச் சென்று உங்களது விசா எண் மற்றும் ID எண் கொடுத்தால் போதும் உங்களது விசா பற்றிய முழு விபரமும் அறியலாம்.
இணையம் செல்ல இங்கே சொடக்கவும்
உங்களது விசா விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டு விசா விற்க்கான பணம் மற்றும் மெடிக்கல் பணம் கட்டிய பிறகு registered agency மூலம் இணையத்தில் இந்த mofa எண் பதிவேற்றம் செய்யப்படும். ஆகையால் மெடிக்கல் முடிந்த பிறகே இந்த mofa எண் கிடைக்கும். நீங்கள் அந்த விசா எண்ணையும் ஐ டி எண்ணையும் கொடுத்தப் பின்னர் கீழே உள்ள படி விசா பற்றிய விபரம் கிடைக்கும்.
மேலும் விபரம் அறிய:
- சவூதி "Ministry of foreign Affairs" Call center telephone: 9200 3333 4 அழைக்கவும்.
- Mofa office at Riyadh Telephone 00966 114055 000 or 406 7777.
- Mofa office at Jeddah Telephone 00966 12 6690 900.
- Mofa office at Dammam Telephne 00966 13 868 3310.
Monday, 30 November 2015
வீட்டில் சூரிய ஒளி மின்சார தயாரிப்புத் திட்டம் ஒரு பார்வை
ஒரு கிலோ வாட் பேட்டரி வசதியுடன் கூடிய மின் தகடு அமைக்க சுமார் 1.50 லட்சம் ரூபாய் செலவாகும். பேட்டரி வேண்டாமென்றால் ரூபாய் 110,000 மட்டுமே செலவாகும்.
ஒரு கிலோ வாட் மின் திட்டத்திற்கு மத்திய அரசு 30,000 ரூபாயும், மாநில அரசு 20,000 ரூபாயும் மானியமாக வழங்கும். நமக்கு 60,000 ரூபாய் மட்டுமே செலவு
ஒரு கிலோ வாட் சூரிய மின் தகடு பதிக்க 75 சதுர அடி இடம் மட்டுமே போதுமானது.
தேவையான பொருள் சூரிய மின்தகடு, இன்வெர்டர், கண்ட்ரோலர், பேட்டரி, பேட்டரி வேண்டாம் என்றால் நெட் மீட்டர் பொருத்தி மின் வாரியத்திற்கு விற்கலாம்.
தமிழகத்தில் 600 நிறுவனங்கள் இதற்க்கு தேவையான சாதனங்களை விற்பனை செய்கின்றன
பெரும்பாலான நிறுவங்கள் சீனா, அமெரிக்க, கனடா, ஜெர்மனி,தைவான் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து விற்கின்றன
சூரிய தகடுகளில் குண்டூசி நுனி அளவில் பல்லாயிரம் கணக்கிலான சோலார் செல்கள் உள்ளன இந்த செல்கள் சூரிய ஒளியிலுள்ள போட்டான்களை ஈர்க்கிறது அவ்வாறு ஈர்க்கும் போது சோலார் செல்களில் உள்ள அணுக்களை தாக்கி மின்சாரம் உற்பத்தியாகிறது. எனவே வெப்பத்தை விட சூரிய ஒளி முக்கியமானது இதன் மூலமே மின்சாரம் தயாரிக்கபடுகிறது .
ஒரு கிலோ வாட் மின்சக்தியில் 4 டியூப் லைட், 3 மின் விசிறி, 1 டிவி அல்லது ஒரு கம்ப்யூட்டர் போன்றவற்றை இயக்க முடியும்.
சோலார் பேனல் அமைக்கும் முறையில் 5 ஏக்கர் நிலத்தில் மெகாவாட் கணக்கில் மின்சாரம் உற்பத்திச்செய்வது அல்லது வீட்டுக்கட்டிடங்களில் 1 மெகாவாட் முதல் 100 மெகாவாட்வரை உற்பத்திச்செய்வது என இரு வகை உண்டு. ஆனால் முதல் கட்டமாக வீடுகளுக்கு ஒரு கிலோவாட்(1000வாட்) என்ற முறையில் அமைப்பதற்கு மட்டுமே மானியம் வழங்கப்படுகிறது. ஒரு கிலோவாட் மின்சாரம் தயாரிக்க 75 சதுர அடி மட்டுமே போதுமானது மேலும் ஏக்கர் கணக்கில் அமைப்பவர்களுக்கு மானியம் வழங்கபடுவதில்லை. வீட்டின் மேல் கூரையில் சோலார் பேனல்கள் அமைக்க 47000 முதல் 60000 ரூபாய் வரை செலவாகும் அதற்கு மேல் ஆகும் தொகை க்கு மத்திய அரசு 30% மானியமும் மாநில அரசு 20% மானியமும் வழங்கும். ஒரு கிலோவாட்டிற்கு மேல் சோலார் பேணல் அமைத்தால் கிலோவாட்டிற்கு ரூபாய் 20,000 என மானியம் கிடைக்கும்.
ஆண்டிற்கு 300 நாட்கள் வீதம் மின்சாரம் தயாரிக்க முடியும் (மீதி நாட்கள் குளிர் காலங்கள் ஆகும்) இதன் மூலம் 4.5 யூனிட் முதல் 5 யூனிட் வரை மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.
ஒருவர் தன்னுடைய வீட்டில் சோலார் மேர் கூரை அமைக்க விருப்பப்பட்டால் ஆன் லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பம் செய்ய கீழே இருக்கும் லிலின்கை கிலிக் செய்யவும்
இங்கே சொடக்கவும்
அதில் கேட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து அனுப்பினால் அதனை பெற்று கொண்டதற்க்கான ஒப்புகை சீட்டு ஆன்லைன் மூலம் நமக்கு கிடைக்கும். இந்த இனைய தளத்தில் சோலார் பேனல்கள் விற்பனை செய்யும் 17 கமபனிகளின் பெயர்கள் இடம் பெற்றிருக்கும் அதில் ஏதாவது ஒரு கம்பனியை தெரிவு செய்து விண்ணப்ப படிவத்தில் தெரிவிக்க வேண்டும்,
விண்ணப்பத்தை 30 நாள் அவகாசம் எடுத்து நமக்கு அனுமதி வழங்கும்.
ஒருவர் தனது வீட்டு மொட்டை மாடியில் சோலார் பேனல் வைத்த பிறகு அந்த மாவட்ட த்தில் உள்ள உதவி பொறியாளர் ஆய்வு செய்து அதனை தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு நிறுவனதுக்கு தகவல் அனுப்புவார் அதன் பிறகு ஒரு மாதத்திற்குள் மானியம் வந்து விடும் மத்திய அரசு மானியம் நேரடியாக கம்பனி மூலம் கழித்து கொள்ளப் படும்.
Tuesday, 11 November 2014
Whisper, Stayfree போன்ற நாப்கின்களை பெண்கள் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள்
Whisper, Stayfree போன்ற நாப்கின்களை பெண்கள் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள்:
இன்றைய கால கட்டத்தில் அதிக பெண்கள் மாதவிடாய் காலங்களில் whisper, stayfree போன்ற நாப்கின் களை உபயோகின்றனர். இதனால் சவுகரியமாகவும், பயன் படுத்துவதும் மிக எளிது மற்றும் பாதுகாப்பானது என்று எண்ணியே இதனை உபயோகின்றனர். எனினும் இந்த அல்ட்ரா நாப்கின்களில் ஒருவகையான கெமிக்கல் பயன் படுத்தி தயாரிக்கின்றனர். அந்த கெமிக்கல் பெண்களுக்கு வெளிப்படும் திரவத்தை ஜெல் நிலைக்கு மாற்றுகிறது. இதனால் பெண்களுக்கு சில வகையான கேடுகளை விளைவிக்கவும் செய்கிறது. அதாவது நாப்கினை பயன்படுத்துபவர்களுக்கு சிறுநீர்ப்பை மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய்கள் உருவாக காரணமாகி விடுகிறது. அல்ட்ரா பேடுகளை பயன்படுத்தும் பெண்கள் 5 மணி நேரத்திற்கு ஒருமுறை அதனை மாற்ற வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை கூறுகின்றனர்.
அதனை அதிக நேரம் பயன்படுத்துவதால் இரத்தம் பச்சை நிறத்திற்கு மாறுவதுடன் பாக்ட்ரியா தொழிற்பாடு அந்த ஜெல்லில் ஏற்பட்டு உடலுக்கு உள்ளே செல்கிறது.
எனவே அல்ட்ரா பேடுகளை பயன்படுத்தாமல் காட்டன் பேடுகளை பயன் படுத்தலாம். இதனை விட சிறந்தது தங்களிடமுள்ள காட்டன் துணிகளை நன்றாக துவைத்து வெயிலில் உலறிய பின்னர் அதனை பயன்படுத்தலாம்.
ஏனெனில் நாம் வாங்கும் புதிய துணிமணிகளை கூட அப்படியே உபயோகிக்காமல் அதனை துவைத்து பின்னர் அணிய வேண்டும் இல்லை எனில் அந்த துணியிலுள்ள கெமிக்கல் கலவை நமக்கு தோல் சம்பந்தமான சில வியாதிகளை கொண்டு வரும். அதனை துவைக்கும் போது அதிலுள்ள இரசாயானங்கள் வெளியேறி விடும்.
Wednesday, 24 September 2014
Nitaqat System: உங்களது கம்பனியின் நிலை (எந்த வண்ணத்தில் உள்ளது என்பதை) அறிய
Nitaqat System முறையில் நம்முடைய கம்பனியின் நிலையை (என்ன கலர்) எவ்வாறு ஆன்லைனில் பரிசோதிப்பது என்று நண்பர் ஒருவர் கேட்டார். நான் அவருக்கு அந்த இணைய முகவரியை கொடுத்தேன் அதற்க்கு அவர் அது முழுவதும் அரபியில் உள்ளது, எவ்வாறு பார்ப்பது? என்றார்.அவருக்காக இந்த பதிவு.
முதலில் கீழே உள்ள இணைய முகவரி செல்லவும்
இணைய முகவரி செல்ல இங்கே சொடக்கவும்
கீழேயுள்ள படத்தை பார்த்து தேவையான தகவல்களை கொடுக்கவும். உங்களது இக்காமா எண்ணை கொடுத்து, சொந்த நாட்டின் பெயரை கொடுக்கவும்.
எப்போது உங்களது கம்பனி இப்பொழுது என்ன வண்ணத்தில் உள்ளது என்பதை எளிதாக அறியலாம்.
Nitaqat System பற்றிய சிறு விளக்கம்:
Nitaqat System என்பது Naturalization Law ஆகும். அதாவது உள்நாட்டு வேலை வாய்ப்பில் சவூதி நாட்டவருக்கும் பங்களிப்பை வழங்குதல் அதாவது 10% ஒதுக்குவதாகும்.
இந்த Nitaqat System தொழிலாளர் சந்தையில் 41 வகையான தொழில்களை (ரியல் எஸ்டேட், கட்டுமானம், ஹோட்டல் etc...) கட்டுப்படுத்துகிறது. இவ்வகையான தொழில்களை அளவின் அடிப்படையில் அதாவது மிகப்பெரிய அளவு, பெரிய அளவு, நடுத்தர அளவு, சிறிய அளவு மற்றும் மிகச்சிறிய அளவு என 5 அளவுகளில் சுருக்கி 205 பிரிவுகளாக பிரிக்கின்றனர். 41 x 5 = 205.
இவ்வகையான தொழில்களில் 10% வேலை வாய்ப்பை சவுதியினருக்கு ஒதுக்க வேண்டும். அவ்வாறு ஒதுக்கவில்லை என்றால் நிறுவனத்தை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்படும்.
இவ்வாறு சவூதி நபர்களை வேலைக்கு அமர்த்துவதன் அடிப்படையில் கம்பனியின் நிலையை பல வண்ணங்களாக பிரிக்கின்றனர். அதாவது ஊதா கலர், பச்சை கலர், மஞ்சள் மற்றும் சிகப்பு கலர். ஊதாகலர் கம்பனியானது மிகவும் நல்ல நிலையில் இருக்கும் கம்பனி ஆகும், சிகப்பு கலர் கம்பனி நிலைமை ரொம்ப மோசமானதாக உள்ளதாகும்.
முதலில் கீழே உள்ள இணைய முகவரி செல்லவும்
இணைய முகவரி செல்ல இங்கே சொடக்கவும்
கீழேயுள்ள படத்தை பார்த்து தேவையான தகவல்களை கொடுக்கவும். உங்களது இக்காமா எண்ணை கொடுத்து, சொந்த நாட்டின் பெயரை கொடுக்கவும்.
எப்போது உங்களது கம்பனி இப்பொழுது என்ன வண்ணத்தில் உள்ளது என்பதை எளிதாக அறியலாம்.
Nitaqat System என்பது Naturalization Law ஆகும். அதாவது உள்நாட்டு வேலை வாய்ப்பில் சவூதி நாட்டவருக்கும் பங்களிப்பை வழங்குதல் அதாவது 10% ஒதுக்குவதாகும்.
இந்த Nitaqat System தொழிலாளர் சந்தையில் 41 வகையான தொழில்களை (ரியல் எஸ்டேட், கட்டுமானம், ஹோட்டல் etc...) கட்டுப்படுத்துகிறது. இவ்வகையான தொழில்களை அளவின் அடிப்படையில் அதாவது மிகப்பெரிய அளவு, பெரிய அளவு, நடுத்தர அளவு, சிறிய அளவு மற்றும் மிகச்சிறிய அளவு என 5 அளவுகளில் சுருக்கி 205 பிரிவுகளாக பிரிக்கின்றனர். 41 x 5 = 205.
இவ்வகையான தொழில்களில் 10% வேலை வாய்ப்பை சவுதியினருக்கு ஒதுக்க வேண்டும். அவ்வாறு ஒதுக்கவில்லை என்றால் நிறுவனத்தை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்படும்.
இவ்வாறு சவூதி நபர்களை வேலைக்கு அமர்த்துவதன் அடிப்படையில் கம்பனியின் நிலையை பல வண்ணங்களாக பிரிக்கின்றனர். அதாவது ஊதா கலர், பச்சை கலர், மஞ்சள் மற்றும் சிகப்பு கலர். ஊதாகலர் கம்பனியானது மிகவும் நல்ல நிலையில் இருக்கும் கம்பனி ஆகும், சிகப்பு கலர் கம்பனி நிலைமை ரொம்ப மோசமானதாக உள்ளதாகும்.
Saturday, 6 September 2014
சவூதி அரசு அமைத்துள்ள குறைந்த கட்டண ஹஜ்ஜ் சேவை:
சவூதி நாட்டினர் மற்றும் அங்கு பணிபுரியும் வெளி நாட்டினர் இவ்வருடம் எளிதாக ஹஜ்ஜ் செய்ய சவூதி ஹஜ்ஜ் அமைச்சகம் குறைந்த கட்டணத்தில் ஏற்பாடு செய்துள்ளது.
கடந்த காலங்களில் ஹஜ்ஜ் வேண்டுமெனில் பெரும்பாலோர் தனியார் டிராவல் ஏஜென்சியை நாடி அவர்கள் கேட்ட பணத்தை கொடுத்து ஹஜ்ஜ் பேப்பர் தயார் செய்து பின்னர் ஹஜ்ஜ் செய்ய முற்படுவர். அதுவும் தனியார் டிராவல் நிறுவனம் இதற்க்கு அதிக பணம் வசூலித்து வந்தனர். இன்னும் பெரும்பாலான நிறுவனங்கள் போலியானவை. அவர்கள் மறைமுகமாக அதிக கட்டணம் வசூலித்து அரசு நிர்ணயித்த அளவை விட அதிகமான நபர்களை ஹஜ்ஜிக்கு அனுப்பி வந்தனர். மேலும் தரமான போக்குவரத்து வசதியோ , தரமான உணவோ அல்லது தரமான தங்குமிட வசதியோ கொடுப்பது கிடையாது. இதனால் ஹஜ்ஜ் நேரங்களில் அரசாங்கத்திற்கு அதிக வேலை பளுவை ஏற்படுத்தியது. இதனை கருத்தில்கொண்டு இவ்வருடம் அரசாங்கமே களத்தில் இறங்கியது.
அதாவது அரசானை எண்: M/58 (28.10.1426) சவூதி ஹஜ்ஜ் அமைச்சகத்தின் புதிய இணையதள மூலம் ஹஜ்ஜ் செல்பவர்கள் தங்களது விபரங்களை அளித்து பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இணையதள மூலம் பணம் செலுத்தி எளிதாக ஹஜ்ஜ் அனுமதியை பெறலாம்.
கடந்த ஆண்டு ஹஜ்ஜ் செய்ய 19,000 பேர் அனுமதி பெற்றனர். இவ்வருடம் 41,000 பேர் ஹஜ்ஜ் செய்ய இத்திட்டத்தின் மூலம் அனுமதி வழங்கபட்டுள்ளது.
கீழ்க்கண்ட இணைய தளம் மூலம் தங்களது பெயரை பதிவு செய்து 48 மணி நேரத்தில் அதற்குறிய பணத்தை செலுத்தி உறுதி செய்து கொள்ளவும்.
இணைய தளம் செல்ல இங்கே சொடக்கவும்
இத்திட்டத்தின் நிபந்தனைகள்:
1) இதற்க்கு முன் ஹஜ்ஜ் செய்து இருந்தால் அதன் காலம் 5 ஆண்டுகள் ஆகி இருக்க வேண்டும்
2) 15 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி
3) ஒருவர் ஆன்லைன் மூலம் 10 பேர் வரைக்கும் பதிவு செய்ய மட்டுமே அனுமதி.
வழங்கும் சேவைகள்:
போக்குவரத்து வாகன வசதி, உணவு மற்றும் தங்குமிட வசதி செய்து தரப்படும்.
கட்டண விகிதம்:
பஸ்: 5000, 4800, 4400, 4150, 3600, 3100, 2500
ரயில்: 5250, 5050, 4650, 4400, 3850, 3350, 2750
தங்களுடைய பயண விபரங்களை பற்றி மேலும் அறிய 19998 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.
Friday, 11 July 2014
Sunday, 29 June 2014
Saturday, 28 June 2014
Wednesday, 25 June 2014
E.B சம்பந்தபட்ட அனைத்துப் பணிகளையும் இனி நீங்கள் ஆன்லைன் மூலம் எளிமையாக கையாளலாம்
முன்பெல்லாம் E.B ஆபீஸில் நம்முடைய வேலையை முடிக்க பல நாள் லீவு போட்டு அலைய வேண்டிவரும். புது இணைப்பு வாங்க, பெயர் மாற்ற, இணைப்பை துண்டிக்க, தவறுதலாக அதிக பில் கட்டணம் வருதல் இது போன்ற இன்ன பிற பிரச்சனைகள். இதெல்லாம் ஒரே நாளில் முடிய கூடிய காரியமும் இல்லே. இதற்காக நம்முடைய சோலி எல்லாம் விட்டுட்டு அலைய வேண்டி வரும். லஞ்சமும் கொடுக்க வேண்டும் ஆனா வேலை மட்டும் சீக்கிரமா முடியவே ..முடியாது. அப்ப என்ன தான் பண்ணலாம்?
கவலையை விடுங்க.
நீங்கள் செய்ய வேண்டியது கீழே உள்ள இணையத்தளத்திற்கு சென்று உங்களுக்கென ஒரு புது கணக்கை (user account) உருவாக்குங்க.
அனைத்து வேலைகளையும் இருந்த இடத்தில் இருந்து கொண்டே முடிங்க.
புதிய கணக்கு உருவாக்க:
அதில் New User என்பதை கிளிக் செய்யவும்,
Region= உங்களது மாவட்டத்தை செலக்ட் செய்யவும், பின்னர் உங்களது EB எண்ணை கொடுக்கவும் உதாரணமாக 060 012 550 இது மாதிரி இருக்கும். இப்பொழுது உங்களது பெயர் மற்றும் முகவரி வரும். இதனை சரிபார்த்து நம்முடைய தான என உறுதி செய்த பின்னர் Confirm எனும் பட்டனை அழுத்தவும். அவ்வளவு தான் இனி உங்களது பெயர், முகவரி, மின் அஞ்சல் முகவரி, தொலைபேசி எண் மற்றும் அதில் கேட்க்கபட்டுள்ள அனைத்து தகவல்கள் கொடுத்து பின்னர் submit செய்யவும்.
இனி உங்களது மின் அஞ்சல் முகவரிக்கு ஒரு மின் அஞ்சல் வரும் அதனுடன் இருக்கும் லிங்க் ஐ கிளிக் செய்த வுடன் உங்களது புதிய கணக்கு உயிர் பெற்று விடும். இனி நீங்கள் தமிழ்நாடு மின்சார வாரியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் இனி எளிமையான முறையில் ஆன்லைன் மூலம் கையாலாம்.
இந்த தளம் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் இருப்பதால் அனைவரும் எளிமையாக கையாளலாம்.
இந்த தளம் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் இருப்பதால் அனைவரும் எளிமையாக கையாளலாம்.
இந்த இணைய தளத்தின் வழியாக என்ன என்ன பயன்?
1) துரிதமாக கட்டணம்: ஆன்லைன் மூலம் எளிதாக பணம் செலுத்தலாம்.
2) கட்டணம் விபரம்: யூனிட் வாரியாக கட்டண விபரம் அறியலாம்.
3) ரசிது பெட்டகம்: மின் கட்டணத்திற்கான ரசிதை பிரின்ட் எடுக்கலாம்.
4) கணக்கு விபரம்: (இதில் நம்முடைய முழு முகவரி, மாதந்திர மின் கட்டணம் செலுத்திய விபரம், இதர கட்டணம் செலுத்திய விபரம் மற்றும் நிலுவையிலுள்ள கட்டண விபரங்கள், முன் பணம் செலுத்தி இருந்தால் அதன் விபரம் ஆகியவற்றை இங்கு முழு விபரமுடன் காணலாம்.
5) காப்புத்தொகை: உங்களது கணக்கிலுள்ள வைப்புத்தொகை மற்றும் வருடாந்திர வட்டி விகிதம் ஆகியவற்றை காணலாம்.
6) பில் விபரம்: இதில் எவ்வளவு யூனிட், எவ்வளவு பணம் அதன் விபரம்
7) எண் சேர்த்தல்: இங்கு நம்முடைய வீட்டு EB எண் மட்டுமில்லாமல் நம்முடைய உறவினர் வீட்டு எண்ணையும் சேர்க்கலாம், அதற்க்கான மின் கட்டணமும் செலுத்தலாம்.
8) எண் நீக்க: நாம் இணையத்தில் இணைத்த எண்ணை நீக்கவும் செய்யலாம்.
9) கடவு சொல் மாற்ற: நாம் கொடுத்த கடவு சொல்லை (password) மாற்றலாம்.
10) முகப்பு மாற்ற: இங்கு தங்களது இணையத்தில் பதிந்த சுய விபரத்தை மாற்றி கொள்ளலாம்.
11) உதவி மையம்: நம்முடைய சில சந்தேகளுக்கு இங்கு பதில் கிடைக்கும்.
12) பொது புகார்: நம்முடைய புகார் எதுவா இருந்தாலும் இங்கே ஆன்லைன் மூலம் தெரிவித்து அதற்க்கான தீர்வும் காணாலாம்.
13) புகார் நிலை: நம்முடைய புகார் எந்த நிலைமையில் உள்ளது எனவும் அறியலாம்.
அவ்வளவு தான் இனி E.B சம்பந்தபட்ட வேலைகளை வீட்டில்/ ஆபீஸில் இருந்து கொண்டே முடிங்க.. நேரத்தை மிச்சப்படுத்துங்க.
ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள கமன்ட் பாக்ஸில் கேளுங்க....
பிடிச்சா சேர் பண்ணுங்க....
Sunday, 15 June 2014
Tuesday, 3 June 2014
சவூதியில், பணியாளர்கள் தங்களது பிரச்சனைகளை எவ்வாறு,எங்கு, எப்படி முறையிடுவது?
சவூதியில் வாழும் பெரும்பாலான தமிழர்கள் தாங்கள் பணி புரியும் இடங்களில் பல வகையான பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.
அதாவது முதாலாளி தொழிலாருக்கு சேர வேண்டிய சம்பளத்தையோ அல்லது பிற சலுகைகளை அதாவது விடுப்பு பணம்(வெக்கேசன் மணி), சர்விஸ் மணி ஆகியவற்றை குறைவாக கொடுப்பது அல்லது கொடுக்காமல் இருப்பது, எக்ஸ்சிட் (Exit) கொடுக்க மறுப்பது இன்ன பிற பிரச்சனைகள் ஏற்படும் போது அதனை எவ்வாறு எதிர்கொள்ளுவது, யாரை அணுகுவது, எப்படி முறையிடுவது என்பது பற்றி பார்ப்போம்.
தொழிலாளர் பிரச்சனைகளை பல வழிகளில் முறையிடலாம், அவற்றில் முக்கியமான சிலவற்றை பற்றி பார்ப்போம்.
1) ஆன்லைன் மூலம் முறையிடலாம்.
2) தொழிலர் அமைச்சகம்(ministry of labor) தொலைபேசி எண் மூலம் முறையிடலாம்.
3) இந்திய தூதரகத்தில்(Embassy Of India) முறையிடலாம்.
4) இந்திய இணை தூதரகத்தில் (Consulate General Of India) முறையிடலாம்.
5) தொழிலாளர் நீதிமன்றத்தில் (Labor Court) அணுகலாம்.
6) தொழிலாளர் நலன் மற்றும் வழிநடத்தும் குழு:
இம்முறைகளை பற்றி விரிவாக பார்க்கலாம்:
1)ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தல்:
Ministry of Labor வெப் சைடிற்கு சென்று ஆன் லைன் மூலம் மிக எளிதாக தங்களது குறைகளை முறையிடலாம். அவ்வாறு முறையிடும் போது தங்களது பெயர், முகவரி, இக்காமா எண் ஆகியவை சரியாக இருக்கும் பட்சத்தில் அவர்களது விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளபட்டு அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆன் லைன் புகார் தெரிவிக்க இங்கே சொடக்கவும்
2) தொழிலர் அமைச்சகம்(ministry of labor) தொலைபேசி எண் மூலம்:
1) Riyadh: 01-4039857
2) Kharj : 01-4548231
3) Dawadmi : 01-6420920
4) Majmaa: 06-4321724
5) Wadi Addawasir: 01-7840264
6) Zulfi: 06-4220235
7) Shaqra: 01-6221342
8) Makkah: 02-5420745
9) Jeddah: 02-6311687
10) Taif: 02-7461616
11) Qunfudah: 07-7320761
12) Madinah: 04-8654416
13) Yanbu: 04-3222688
14) Al-Ula: 04-8840830
15) Qassim (Buraidah): 06-3250387
16) Onaizah: 06-3640285
17) Al-Rass: 04-3333502
18) Hail: 06-5321139
19) Dammam: 03-8261419
20) Ahsa: 03-5822801
21) Hafr albatin: 03-7220220
22) Khobar: 03-8641541
23) Abqaiq: 03-5661324
24) Jubail: 03-3620150
25) Khafji: 03-7660380
26) Ras Tannurah: 03-6670424
27) Aseer (abha): 07-2242128
28) Bisha: 07-6226718
29) Baha: 07-7253240
30) Najran: 07-5224995
31) Jazan: 07-3213671
32) Jazan: 07-3213671
33) Jauf: 04-6241766
34) Qurrayyat: 04- 6421108
35) Tabuk: 04-4221181
36) Al Wahj: 04-4421970
37) Arar: 04-6627128
38) Turaif: 04-6521029
தொழிலாளர்கள் தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காண, அனைத்து வேலை நாட்களில் 9.00a.m லிருந்து 12.30 p.m வரை கீழ் கண்ட விண்ணப்பத்தை பூர்த்தி செய்து நேரில் சென்று கொடுக்கவும்.
Labor Complaint Form- தரவிறக்கம் செய்ய இங்கே சொடக்கவும்
4) இந்திய இணை தூதரகத்தில் முறையிடலாம்:
தொழிலாளர்கள் தங்களுக்கு நேர்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண, எல்லா வேலை நாட்களிலும் கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து நமது இந்திய இணை தூதரகத்தை அணுகலாம்.
Labor complaint-consulate தரவிறக்கம் செய்ய இங்கே சொடக்கவும்
5.தொழிலாளர் நீதிமன்றத்தை (Labor Court) அணுகலாம்:
கீழேயுள்ள தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்.
1) Makkah: 02 5420745
2) Jeddah: 02-6311687
3) Taif: 02-7495200
4) Qunfudhah: 07-7321250
5) Madina: 04-8654417
6) Yanbu: 04-3222488
7) Alula: 04-8840830
8) Abha: 07-2242128
9) Bishah: 07-6226718
10) Albahah: 07-7253240
11) Najran: 07-5221431
12) Jazan: 07-3226446
13) Tabuk: 04-4221181
14) Al Wahj: 04-4421970
அனைத்து தொழிலாளர் பிரச்சனைகளும் மேற்கண்ட இடங்களில் சரியான முறையில் தீர்த்து வைக்கப்படும்.
நீங்கள் செல்லும்போது சரியான ஆவணகளை அதாவது "வேலை ஒப்பந்த நகல், பாஸ்போர்ட் நகல்,இக்காமா நகல், கபிலுடைய தொலைபேசி எண் மற்றும் முழு விலாசம் கொடுக்க வேண்டும் மேலும் நீங்கள் கொடுக்கும் விண்ணப்பம் அரபியில் இருக்க வேண்டும்.
6) தொழிலாளர் நலன் மற்றும் வழிநடத்தும் குழு:
தொழிலாளர் நலன் காக்கவே புதியதாக ஒரு அலுவலகம் ஜித்தாவில் திறக்கப்பட்டுள்ளது இங்கும் நீங்கள் நேரில் சென்று முறையிடலாம்.
உங்களுக்கு ஆலோசனைகள் வழங்கி அப்பிரச்சனைகளுக்கும் சட்ட ரீதியாக தீர்வு காண உதவிடுவர்.
முகவரி:
Office of the Domestic Workers Committee,
The Director of welfare & Guidance
Consultant of Training & Social Reserch,
Near Al Hamra ( formerly sofitel) Hotel, Jeddah.
Tel: 6616688 Fax: 6653238 Cell: 0504658803
Tuesday, 27 May 2014
Saturday, 24 May 2014
சவூதி நாட்டினருக்கேன்று ஒதுக்கப்பட்டுள்ள பதவிகளின் பட்டியல் (List of Profession reserved for Saudis)
சவூதியில் உள்ள நிறுவனங்களில் கீழ்க்கண்ட பணியிடங்கள் சவூதி நாட்டினர் மட்டுமே பணி புரிய கூடிய வகையில் சவூதி அரசாங்கம் வரையறுத்துள்ளது.
இப்பதவிகளில் சவூதி நாட்டினர் மட்டுமே பணி புரிய முடியும், மற்ற நாட்டினர் இப்பதவிக்களுக்கு வர இயலாது எனவே இப்பொழுது நீங்கள் வகிக்கும் பதவி கீழே உள்ள பட்டியலில் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளவும். உங்களுடைய பதவி கீழே உள்ள பட்டியலில் இடம் பெற்றிருந்தால் உடனே உங்களுடைய இக்காமா வில் குறிப்பிட்டுருக்கும் பதவியின் பெயரை மாற்றுவது நல்லது. இல்லையன்றால் எதிர்காலத்தில் பிரச்சனை ஏற்படலாம்.
கீழ்க்கண்ட பணியிடங்கள் சவூதி நாட்டினர் மட்டுமே பணி புரிய முடியும்:
(List of Professions Reserved for Saudis)
- Executive HR Manager
- HR Manager
- Labor Affairs Manager
- Staff Relations Manager
- Staff Relations Specialist or Individual Affairs Clerk
- Recruitment Clerk or Employment Clerk
- Staff Affairs Clerk or Personal Affairs Clerk
- Duty Clerk or Attendance Control Clerk
- Receptionist
- Hotel Receptionist
- Health Receptionist
- Complaint Clerk or Claim Clerk
- Cashier
- Security Guard
- Representative or Broker
- Key Specialist
- Custom Broker or Custom Clearance Employee
- Female Sales Specialist for Ladies Shop.
Thursday, 22 May 2014
கிராம நிர்வாக அலுவலர் (VAO) தேர்வுக்கு விண்ணப்பம் செய்து உள்ளீர்களா? ஆன் லைன்ல் பரிசோதித்து கொள்ளவும்
தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வானையம் ஜூன் 16 ம் தேதிக்கு 2,342 பதவிக்கு பணியாளர்களை தேர்வு செய்ய தேர்வு நடத்த உள்ளது. மேலும் விபரம் அறிய இங்கே http://bakrudeenali.blogspot.com/2014/04/2014.html சொடக்கவும்.
கிட்டதட்ட 10 லட்சம் வரையிலான விண்ணப்பங்கள் பெறப்பட்டு இருந்தன.
முறையாக விண்ணபித்து, சரியான விண்ணப்ப மற்றும் தேர்வு கட்டணம் செலுத்தியவர்க்ளுடைய விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு இணைய தளம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
நீங்கள் இத்தேர்விற்க்கு விண்ணப்பித்து இருந்தால் உடனே கீழ்க்கண்ட இணையத் தளத்திற்க்குச் சென்று உங்கள் பதிவு எண்ணைக் கொடுத்து உள்ளே நுழைந்து உங்களது தகவல்கள் சரியாக உள்ளதா என பரிசோதித்து கொள்ளவும்.
இணையதள முகவரி
http://www.tnpsc.gov.in/Appstatusget-VAO2K14.html
நீங்கள் சரியான முறையில் விண்ணப்பம் செய்து அனனத்து கட்டணமும் செலுத்திய பின்னரும் உங்களுடைய பெயர் இந்த லிஸ்டில் இல்லையா..? உடனே நீங்கள் செய்ய வேண்டியது contacttnpsc@gmail.com என்ற மின் அஞசலுக்கு விண்ணப்பதாரர் பெயர்,முகவரி, பதிவு எண், பணம் செலுத்திய ரசிது ஆகியவற்றின் நகலை இணைத்து நாளை (23.05.2014) க்குள்அனுப்ப வேண்டும்.
Subscribe to:
Posts (Atom)

























