Monday 30 November 2015

வீட்டில் சூரிய ஒளி மின்சார தயாரிப்புத் திட்டம் ஒரு பார்வை



ஒரு கிலோ வாட் பேட்டரி வசதியுடன் கூடிய மின் தகடு அமைக்க சுமார் 1.50 லட்சம் ரூபாய் செலவாகும். பேட்டரி வேண்டாமென்றால் ரூபாய் 110,000  மட்டுமே செலவாகும். 
ஒரு கிலோ வாட் மின் திட்டத்திற்கு  மத்திய அரசு 30,000 ரூபாயும், மாநில அரசு 20,000 ரூபாயும் மானியமாக வழங்கும். நமக்கு 60,000 ரூபாய் மட்டுமே செலவு  
ஒரு கிலோ வாட் சூரிய மின் தகடு பதிக்க 75 சதுர அடி இடம் மட்டுமே போதுமானது.

தேவையான பொருள் சூரிய மின்தகடு, இன்வெர்டர், கண்ட்ரோலர், பேட்டரி, பேட்டரி வேண்டாம் என்றால் நெட் மீட்டர் பொருத்தி மின் வாரியத்திற்கு விற்கலாம்.
தமிழகத்தில் 600 நிறுவனங்கள் இதற்க்கு தேவையான சாதனங்களை  விற்பனை செய்கின்றன 



பெரும்பாலான நிறுவங்கள் சீனா, அமெரிக்க, கனடா, ஜெர்மனி,தைவான் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து விற்கின்றன 

சூரிய தகடுகளில் குண்டூசி நுனி அளவில் பல்லாயிரம் கணக்கிலான சோலார்  செல்கள் உள்ளன இந்த செல்கள் சூரிய ஒளியிலுள்ள போட்டான்களை ஈர்க்கிறது அவ்வாறு ஈர்க்கும் போது சோலார் செல்களில் உள்ள அணுக்களை தாக்கி மின்சாரம் உற்பத்தியாகிறது.  எனவே வெப்பத்தை விட சூரிய ஒளி முக்கியமானது இதன் மூலமே மின்சாரம் தயாரிக்கபடுகிறது .

ஒரு கிலோ வாட் மின்சக்தியில் 4 டியூப் லைட், 3 மின் விசிறி, 1 டிவி அல்லது ஒரு கம்ப்யூட்டர் போன்றவற்றை இயக்க முடியும். 

சோலார் பேனல் அமைக்கும் முறையில் 5  ஏக்கர் நிலத்தில் மெகாவாட் கணக்கில் மின்சாரம் உற்பத்திச்செய்வது அல்லது வீட்டுக்கட்டிடங்களில் 1 மெகாவாட் முதல்  100 மெகாவாட்வரை உற்பத்திச்செய்வது என இரு வகை உண்டு. ஆனால்  முதல் கட்டமாக வீடுகளுக்கு ஒரு கிலோவாட்(1000வாட்)  என்ற முறையில் அமைப்பதற்கு மட்டுமே மானியம் வழங்கப்படுகிறது. ஒரு கிலோவாட் மின்சாரம் தயாரிக்க 75 சதுர அடி மட்டுமே போதுமானது மேலும் ஏக்கர் கணக்கில் அமைப்பவர்களுக்கு மானியம் வழங்கபடுவதில்லை. வீட்டின் மேல் கூரையில் சோலார் பேனல்கள் அமைக்க 47000 முதல் 60000 ரூபாய் வரை செலவாகும் அதற்கு மேல் ஆகும் தொகை க்கு மத்திய அரசு 30% மானியமும் மாநில அரசு 20% மானியமும் வழங்கும்.  ஒரு கிலோவாட்டிற்கு மேல் சோலார் பேணல் அமைத்தால் கிலோவாட்டிற்கு ரூபாய் 20,000 என மானியம் கிடைக்கும்.
ஆண்டிற்கு 300 நாட்கள் வீதம் மின்சாரம் தயாரிக்க முடியும் (மீதி நாட்கள் குளிர் காலங்கள் ஆகும்) இதன் மூலம் 4.5 யூனிட் முதல் 5 யூனிட் வரை மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.
ஒருவர் தன்னுடைய வீட்டில் சோலார் மேர் கூரை அமைக்க விருப்பப்பட்டால் ஆன் லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.  ஆன்லைன் விண்ணப்பம் செய்ய கீழே இருக்கும் லிலின்கை கிலிக் செய்யவும்

                                                          இங்கே சொடக்கவும்


அதில் கேட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து அனுப்பினால் அதனை பெற்று கொண்டதற்க்கான  ஒப்புகை சீட்டு ஆன்லைன் மூலம் நமக்கு கிடைக்கும். இந்த இனைய தளத்தில் சோலார் பேனல்கள் விற்பனை செய்யும் 17 கமபனிகளின்  பெயர்கள் இடம் பெற்றிருக்கும்  அதில் ஏதாவது ஒரு கம்பனியை தெரிவு செய்து விண்ணப்ப படிவத்தில் தெரிவிக்க வேண்டும்,
விண்ணப்பத்தை 30 நாள் அவகாசம் எடுத்து நமக்கு அனுமதி வழங்கும்.

 ஒருவர் தனது வீட்டு மொட்டை மாடியில் சோலார் பேனல் வைத்த பிறகு அந்த மாவட்ட த்தில் உள்ள உதவி பொறியாளர் ஆய்வு செய்து அதனை தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு நிறுவனதுக்கு தகவல் அனுப்புவார் அதன் பிறகு ஒரு மாதத்திற்குள்  மானியம் வந்து விடும் மத்திய அரசு மானியம் நேரடியாக கம்பனி மூலம் கழித்து கொள்ளப் படும்.

No comments:

Post a Comment

 

Blog Template by YummyLolly.com - RSS icons by ComingUpForAir