Tuesday 16 July 2013

தேங்காய் எண்ணெய் தேய்த்தால் வழுக்கை ஆவீர்கள்


கடைகளில் விற்கும் கலப்பட தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால் வழுக்கை ஆவது -முடி கொட்டுவது மட்டும் இல்லாமல் முடி நரைக்கவும் செய்யும் எனபது உண்மை தேங்காய் எண்ணையே கலப்படம் தானா கடைகளில் கிடைக்கிற பெரும்பாலான தேங்காய் எண்ணெய் என்பது தேங்காய் எண்ணையே இல்லை என்பது தான் அதிர்ச்சி தரும் தகவலாக இருக்கிறது !!!

சரி ..வேறு என்ன தேங்காய் எண்ணெய்க்கு பதில் வேறு என்ன இருக்க முடியும் தேங்காய் விலை கூடும் போதெல்லாம் தேங்காய் எண்ணையின் விலை கூடுவதில்லை ..பின் எப்போது தான் கூடுகிறது 
கச்சா எண்ணெய் விலை கூடும் போது தான் விலை கூடுகிறது ..
கச்சாஎண்ணெய்க்கும் தேங்காய் எண்ணெய்க்கும் -என்ன தொடர்பு 
தேங்காய் எண்ணெய் என்ற பெயரிலே மினரல் ஆயில் என்ற பெட்ரோலிய கழிவுடன் தேங்காய் எண்ணெய் எசன்ஸ் கலந்து தேங்காய் எண்ணெய் என்ற பெயரிலே மார்க்கெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது
மினரல் ஆயில் என்றால் என்ன ?

பெட்ரோலியப் பொருகளின் ஆக கழிவு பொருளே மினரல் ஆயில் என்னும் அமெரிக்க மண்ணெண்ணெய் என்னும் லிக்யுட் பேரபின் ஆகும் .கச்சா எண்ணையிலிருந்து அதீத கடைசி பொருளே இந்த மினரல் ஆயில் ஆகும் .கச்சா எண்ணெய்யை சுத்திகரித்து, பெட்ரோல், டீசல், கெரசின், நாப்தலீன், மெழுகு என மொத்தம் 24 வகையான பொருட்கள் எடுக்கப்பட்டு எஞ்சியிருப்பது “மினரல் ஆயில்’. இதற்கு நிறமோ, மணமோ இருக்காது.இதன் அடர்த்தி அதிகம் .எந்த வகை எண்ணையுடனும் எளிதாக கலப்படம் செய்து விடலாம் ..

மினரல் ஆயில் பற்றி படிக்க விக்கிலீக் தளத்திற்கு செல்ல இங்கே http://en.wikipedia.org/wiki/Mineral_oil

பாராசூட் முதல் ஹெர்பல் என்னும் ஹிமாலயா கம்பெனி வரை ..ஜான்சன் பேபி ஆயில் முதல் சோப்பு வரை ,எல்லாவிதாமான முக லோஷன்களிலும் இந்த மினரல் ஆயில் என்னும் அரக்கன் இருக்கிறான் என்பது வேதனையான விஷயம் தான் தேங்காய் எண்ணெய் என்று நாம் இது வரை நம்பி இருக்கிற -மினரல் ஆயில் கலந்த கம்பெனிகள் தயாரிக்கிற தேங்காய் எண்ணெய் இவைகள் ..

No comments:

Post a Comment

 

Blog Template by YummyLolly.com - RSS icons by ComingUpForAir