Thursday, 26 September 2013

ALFA NETWORK Wireless எளிமையான முறையில் டவுன்லோட் செய்ய.



வளைகுடா நாடுகளில் பெரும்பாலோர் ALFA NETWORK ஐ பயன் படுத்துவார்கள். இது தங்களுடைய wifi சிக்னலை அதிகபடியாக இழுத்து உங்களது கணினியின் இணைய வேகத்தை அதிகப்படுத்தும்.

இந்த ALFA NETWORK பணம் கொடுத்து வாங்கி அதிலிருக்கும் வன்தட்டை (CD) தங்களது கணினியில் தரவிறக்கம் செய்து பயன்படுத்தி வருவார்கள்.

சில நேரங்களில் அந்த வன்தட்டை நாம் எங்கே வைத்தோம் என மறந்து இருப்போம் அல்லது தொலைத்துவிட்டிருப்போம்.

அந்த மாதிரி நேரங்களில் இந்த இனைய தளம் உங்களுக்கு கை கொடுக்கும்.

கீழே உள்ள இணையதள முகவரிக்கு சென்று கீழ்க்கண்டவாறு செய்யவும்.



Product Category: Indoor Wireless
Product Model: AWUS036H (உங்களது ALFA மாடல் நம்பரை பார்க்கவும்)
Type of File: Driver
Keyword: AWUS036H
Enter secure Code to Download: (கட்டத்திற்கு வெளியே கொடுக்கப்பட்டிருக்கும் ஆங்கில எழுத்தை பார்த்து கட்டத்திற்குள் டைப் செய்யவும்.
பின்னர் Download என்பதை கிளிக் செய்தால் கீழே கண்டவாறு வரும்
அதில் Windows / Mac / Linux என இருக்கும் உங்களுடைய கணினி Windows xp அல்லது Windows 7 எனில் Windows என்பதை கிளிக் செய்யுங்கள். இப்பொழுது அந்த Driver உங்களுக்கு கணினியில் தரவிறக்கம் ஆகும்.


அதனை கிளிக் செய்து run என்பதை கிளிக் செய்வதன் மூலம் ALFA NETWORK Wireless வேலை செய்யும்.

குறிப்பு: ரன் செய்யும் முன்னர் உங்களது ALFA NETWORK Wireless பின்னை கணினியில் சொருகி இருக்க வேண்டும்.

அவ்வளவு தான், இனிமே உங்களது கணினியின் Wireless Signal ஐ பாருங்கள், கண்டிப்பாக அதிகமாக கூடி இருக்கும், இணைய வேகமும் முன்னை விட அதிக விரைவாக இருக்கும்..


இணைய முகவரி
http://www.alfa.com.tw/download.php


Wednesday, 25 September 2013

சிகரெட் பிடிப்பதானால் ஏற்படும் நன்மைகள்!!



ஒரு சிகரெட் கம்பெனி தனது புதிய கிளையை திறப்பதை முன்னிட்டு அந்த கம்பெனியின் மேலாளர் ஒரு புது வகையான விளம்பரம் ஒன்றை செய்தார்.

 அதாவது தங்களுடைய கம்பெனியின் சிகரெட்டை யார் வாங்கி பயன்படுத்துகிறார்களோ அவர்களுக்கு மூன்றுவிதமான பயன்கள் கிடைக்கும் என உறுதி அளித்தார்

அதாவது எங்களது கம்பெனி சிகரெட்டை யார் வாங்கி குடிக்கிறார்களோ அவர்களுக்கு முதுமையே வராது என்றும்,

இரண்டாவது அவர்களுக்கு பெண் பிள்ளைகளே பிறக்காது என்றும்,

மூன்றாவது அவர்களுடைய வீட்டிற்கு திருடன் வரமாட்டான் என்றும் கூறினார்...

இதனை கேட்ட மக்கள் அதிக அளவில் அக்கம்பெனி சிகரெட்டை வாங்கி குடித்தனர்... கம்பெனி மிகப்பெரிய லாபத்தை அடைந்தது.

எல்லாரும் ஒரே மாதிரியாகவா இருப்பார்கள்..? அதில் ஓருவன் அக்கம்பெனிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தான்..அக்கம்பெனி மேலாளர் எங்களை ஏமாற்றி விட்டார் எனவும் அவரையும், அந்த கம்பெனியையும் தண்டிக்க வேண்டும் என்றும் கூறினான்.

அதனை விசாரித்த நீதிபதி,  அக்கம்பெனி மேலாளரிடம் விசராணை செய்தார்.

மேலாளர் அதற்க்கு அளித்த விளக்கத்தை பார்த்து நீதிபதி திகைப்படைந்து விட்டார்.

அவர் கூறியதாவது...
"கணம் நீதிபதி அவர்களே... நான் பொய்சொல்லவில்லை, உண்மையை  தான் கூறினேன்"

முதலில் நான் சொன்னது.. சிகரெட்டை யார் வாங்கி குடிக்கிறார்களோ அவர்களுக்கு முதுமையே வராது என்றேன்... உண்மை தான், ஏனெனில் சிகரட்டை குடிப்பவர்கள் அற்ப காலத்திலேயே உயிரை இழந்து விடுவார்கள் பின்னர் எப்படி முதுமை அவர்களை வந்து அடையும்?"

இரண்டாவது "அவர்களுக்கு பெண் பிள்ளைகளே பிறக்காது"என்றேன். இதுவும் சரி தான். எப்படி என்றால் அதிக அளவில் புகைபிடிப்பவர்களுக்கு ஆண்மை தன்மை நாளடைவில் குறைந்து விடும், அவர்களுக்கு மொத்தத்தில் பிள்ளைகளே பிறப்பது கஷ்டம் இதில் ஆண் என்ன? பெண் என்ன? " எனவே தான் அவ்வாறு சொன்னேன் என்றார்.

மூன்றாவதாக  "அவர்களுடைய வீட்டிற்கு திருடன்  வரவே மாட்டான்" என சொன்னேன். இதுவும் உண்மை தான்

புகைபிடிப்பவர்கள் அதிக அளவில் இருமி கொண்டே இருப்பார்கள். இரவிலும் சரி , இதனால் அந்த வீட்டிற்கு வரும் திருடன் அந்த சத்தத்தை கேட்டு "வீட்டில் ஆள் தூங்காமல் இருக்கிறார்கள்" என திரும்பி சென்று விடுவான்.  என்றார்..


நீதிபதி:!!!!















Friday, 20 September 2013

Bio-Data; Resume; CV - இவைகளுக்கான வேறுபாடு.

Bio-Data:

இது அந்த மனிதனுடைய தகவல்கள், பண்புகள், பொழுதுபோக்கு, விருப்பம் மற்றும் கல்வி தகுதியை விளக்கும்.

Resume:

இது ஓன்று அல்லது இரண்டு பக்ககங்களை கொண்டது. உங்களுடைய திறமைகள், அனுபவங்கள் மற்றும் கல்வி தகுதியை குறிக்கும்.

CV (Curriculam Vitae):

இது மிகவும் நீளமானதாகவும், அனைத்து தகவல்கள் அடங்கியதாகவும் இருக்கும்.  மேலும் இது ஒன்றுக்கு மேற்பட்ட பக்கங்களை உண்டையதாக இருக்கும். அனுபவங்களை அதிகமான அளவில் அடங்கி இருக்கும்.

Tuesday, 17 September 2013

பாம்புக்கு பால் ஊற்றுவதும், முட்டை வைப்பதும் ஏன் தெரியுமா..?



இதில் ஒரு உண்மை என்னவென்றால் முட்டையையும், பாலையும் பாம்பு குடிக்காது, இது விஞ்ஞான பூர்வமாக ஒத்துகொள்ளபட்ட ஒரு உண்மை.

அப்படினா.. ஏன் அதற்க்கு பாலும், முட்டையும் வைகிறார்கள்?

அதிகமானோருக்கு இதற்க்குவிளக்கம் தெரியாது, இருந்தாலும் இதனை பின்பற்றுவர்.

சரி விசயத்திற்கு வருவோம்.. ஆதிக்காலத்தில் பாம்புகள் மனிதனுக்கு பெரிய பிரச்சனையாக இருந்து வந்தது. ஏனென்றால் பெரும்பாலும் அந்த காலத்தில் மரங்கள், செடிகள் அதிகமாக இருந்ததால் பாம்புகளும் அதிக அளவில் இருந்து மனிதனுக்கு தொந்தரவு செய்து வந்தது.. இருந்தாலும் ஆதி கால மனிதர்கள் பாம்புகளை கொல்ல நினைக்காமல் அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த நினைத்தனர். இதன் விளைவு தான் முட்டையும், பாலும்.

என்ன புரியவில்லையா...? அதாவது..
பாம்புகள் இனப்பெருக்கம் மேற்கொள்ளுவது கொஞ்சம் வித்தியாசம். பெண் பாம்பு தன்னுடைய உடலிலிருந்து ஒருவித வாசனை திரவத்தை (ப்ரோமொன்ஸ் ) வெளிப்படுத்தும். அதனை நுகர்ந்து ஆன் பாம்பு பெண் பாம்பை தேடி வரும். பின்னர் அது ...அது......வேண்டாம் ...சென்ஸார்

ஆகையால் பாலை அதன் மேல் ஊற்றுவதால் பெண் பாம்பின் மேலிருந்து வெளிவரும் அந்த வாசனை கட்டுப்படுத்தப்படுகிறது.  அப்போ முட்டை? முட்டையை பாம்பு கொத்தி உடைத்துவிடும் அதனால் முட்டையிலிருந்து வரும் வாசனையும் அதனை கட்டுப்படுத்தபடுகிறது..

இனிமே... பாம்பு,  பாலும், முட்டையும் சாப்பிடும் என சொல்வீர்கள்...?


Monday, 16 September 2013

தேசிய நாளை(National Day) முன்னிட்டு சவூதியில் 2 நாட்கள் விடுமுறை



சவூதி அரேபியாவின் தேசிய தினத்தை (National Day) முன்னிட்டு செப்டம்பர் 22 மற்றும் 23 ஆகிய தினங்கள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஏற்கனவே வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை வாரவிடுமுறை அமலில் உள்ளது.

சவூதி தேசிய தினம் ஞாயிற்றுக்கிழமை வருவதால் 4 நாட்களுக்கும் விடுமுறை விட சவூதி அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.

 ஆகையால் சவூதி அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்கு 4 நாட்கள் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனங்களை பொறுத்தவரை ஒருநாள் (செப்டம்பர் 23) மட்டுமே விடுமுறையாக இருக்கும்.









 

Blog Template by YummyLolly.com - RSS icons by ComingUpForAir