Friday, 23 August 2013

எளிமையாக youtube வீடியோ வை தரவிறக்கம் செய்ய.


Youtube வீடியோ வை எந்த வித மென்பொருளும் பயன்படுத்தாமல் எளிமையான முறையில் தரவிறக்கம் செய்யலாம்.

மேலும் நீங்கள் விரும்பிய வகையில் விரும்பிய தரத்தில், மிகவும் உயர்ந்த  தரத்தில் (MP4, FLV,WEBM, 3GP) தரவிறக்கம் செய்யலாம்.

நீங்கள் செய்ய வேண்டியது.. உங்களுடைய browser ஐ அதாவது Google Chrome அல்லது Firefox அல்லது Opera இதில் ஏதாவது ஒன்றை ஓபன் செய்யவும் Firefox தான் சிறந்தது.
Firefox ஓபன் செய்யவும் பின்னர் கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்யது, Add to Firefox கொடுக்கவும். பின்னர் Install கொடுக்கவும். அவ்வளவு தான் இப்பொழுது Firefox ஐ ரீ ஸ்டார்ட் கொடுக்கவும்

https://addons.mozilla.org/en-us/firefox/addon/1-click-youtube-video-download/

இப்பொழுது யூடுப் இல்  நீங்கள் விரும்பிய வீடியோ விற்கு கீழே பாருங்கள் Download என்று ஓன்று இருக்கும். அதை கிளிக் செய்தால் அதில் நிறைய தர வகைகள் வரும். இங்கு நீங்கள் விரும்பிய தரத்தை தேர்வு செய்து எளிமையாக தரவிறக்கம் செய்யலாம் 

Thursday, 22 August 2013

தனித்தன்மை


500 ரூபாய் நோட்டு:

200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டை காட்டி  " யாருக்கு இது பிடிக்கும்?” எனக் கேட்டார்.

.கூடியிருந்த அனவரும் தனக்கு பிடிக்குமென கையை தூக்கினர்.

பேச்சாளார் “உங்களில் ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத் தருகிறேன் ஆனால் அதற்கு முன்” என சொல்லி
அந்த 500 ரூபாயைக் கசக்கி சுருட்டினார். பிறகு அதை சரி செய்து
“இப்போதும் இதன் மீது உங்களுக்கு இன்னும் விருப்பம் இருக்கிறதா?” என்றார்கள்.
அனைவரும் கையைத் தூக்கினர்.

அவர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டை காட்டி
“இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா?" என்றார்
அனைவரும் இப்போதும் கைகளை தூக்கினர்.

அவர் தொடர்ந்தார் “கேவலம் ஒரு 500 ரூபாய்தாள் பல முறை கசங்கியும் மிதிப்பட்டும் அழுக்கடைந்தும் அதன் மதிப்பை இழக்கவில்லை. ஆனால் மனிதர்களாகிய நாம் அவமானப் படும் போதும் ,தோல்விகளை சந்திக்கும் போதும் மனமுடைந்து போய் நம்மை நாமே தாழ்த்தி கொள்கிறோம் .

நம்முடைய மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. நீங்கள் தனித்துவமானவர்.

இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொர்ருத் தனித் தன்மை இருக்கும்.அதன் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. வாழ்கை என்ற பயிர்க்கு தைரியமும் தன்னம்பிக்கையும் தான் உரமும் பூச்சிக்கொள்ளிகளும்
ஆகையால் தன்னம்பிக்கையை இழக்காமல் வாழுங்க! வாழ்க்கையில் வெற்றி பெறுங்க!!

ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம் தெரியாத உண்மைகள்




உபயோகமுள்ள தகவல்கள்:

வாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர், சாலைகளில் இடம் பெற்றவை குறித்து அறிந்திருப்பதில்லை.

* பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம்.

* சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடுவது தவறு. அபாயகரமான அல்லது வாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும்போதோ எரியவிட வேண்டும்.

* சிக்னல்கள் அல்லது ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இருக்கும்போது, அனைத்து விளக்குகளையும் எரியவிடக் கூடாது.

* ரோட்டின் நடுவில் கோடுகளை குறிப்பிட்ட இடைவெளியில் விட்டுவிட்டு போட்டிருந்தால், ஒரு வாகனத்தை நாம் இந்த இடத்தில் முந்திச் செல்லலாம் என்று பொருள். அதேசமயம் தொடர்ச்சியான நீண்ட கோடுகளாக போட்டிருந்தால் முந்தக் கூடாது என்று பொருள்.

* ரோட்டின் நடுவில் தொடர்ச்சியாக இரட்டைக் கோடுகள் போட்டிருந்தால், அதை ஒரு தடுப்புச் சுவராக கருதவேண்டும்.

* ஓட்டுனருக்கு 20.5 மீ (67 அடி) தொலைவில் இருந்து வரும் வாகனத்தின் பதிவு எண்ணை படிக்க முடிந்தால், கண்கள் நல்ல பார்வையுடன் உள்ளது என பொருள். எனவே, ஆண்டுக்கு ஒருமுறை ரத்தஅழுத்தம், சர்க்கரை, கண் பரிசோதனை செய்வது நல்லது.

* கனகர வாகனங்களின் பின்புறம் சிவப்பு நிற முக்கோண வடிவச் சின்னம் உள்ளது. இது முற்றிலும் தவறு. மோட்டார் வாகன சட்டப்படி, அது ஒரு எச்சரிக்கை சின்னம். ரோட்டில் ஒரு வாகனம் பழுதாகி நின்றாலோ, அவசர நிலையிலோ அதை வாகனத்தின் பின்புறம் 15 அடி தள்ளிதான் வைக்க வேண்டும்.

* நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனத்திற்கு வசதியாக முகப்பு விளக்குகளை 250 மீ.,க்கு முன்பே “டிம்’ செய்ய வேண்டும்.

* வளைவுகளில் அதிவேகமாக ஓட்டிச் சென்றால் விபத்து நடக்கும். அதற்கு “இன் ஸ்லோ-அவுட் பாஸ்ட்’ என்ற முறையில் செல்ல வேண்டும். அதாவது, மைய ஈர்ப்பு விசை, விலக்கு விசைகளின் அடிப்படையில், வளைவுகளில் நுழையும்போது மெதுவாகவும், பின் ஆக்ஸிலேட்டரை லேசாக அழுத்தியும் செல்ல வேண்டும். ஆனால் பலர் வேகமாகவே நுழைந்து பிரேக் அடித்து திரும்புகின்றனர். இதனால் வாகனம் கவிழ்ந்துவிடும்.

* கார்களில் செல்வோர் “சீட் பெல்ட்’ அணியும்போது
சட்டைப் பையில் போன், பேனா, சில்லரை காசுகள் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். பெண்கள் அதிக நகை அணிந்திருக்கக் கூடாது. அசம்பாவிதம் நேரிட்டால் அந்த பொருட்களே பயணிக்கு எமனாக மாறிவிடும்.

* நான்கு வழிச் சாலையின் நடுவே மீடியனில் அரளி செடிகளையே வைத்துள்ளனர். காரணம் எதிரே வரும் வாகனத்தின் முகப்பு விளக்கு ஒளியில் இருந்து கண்களை பாதுகாக்கும். வறட்சியையும் தாங்கும் இச்செடிகளின் வேர்கள் அதிகம் வெளிவராது. இது வாகனங்களின் கார்பன் டை ஆக்சைடை அதிகம் “அப்சர்வ்’செய்கிறது. விலங்குகளும் இவற்றை உண்பதில்லை.

* நமக்கு அவசர அழைப்பு எண் 108 என்பது தெரியும். மற்றுமொரு எண் 112 என்பது பலருக்கு தெரியாது. மொபைல் போன் “சிக்னல்’ இல்லாத இடங்களிலும், மொபைலின் “கீ லாக்’ செய்யப்பட்ட நிலையிலும், ஏன் “சிம்கார்டு’ இல்லாத நிலையிலும்கூட இந்த எண்ணை அவசர உதவிக்கு பயன்படுத்தலாம்.

மொத்தத்தில் விவேகமான வேகமே விபத்துக்களில் இருந்து நம்மை பாதுகாக்கும்.

Wednesday, 21 August 2013

இந்தியரை காப்பாற்றிய சவூதி மன்னர்!!!



சாலை விபத்தொன்றில் 9 நபர்களை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டு 7 ஆண்டுகள் சிறையில் வாடிய இந்தியர் ஒருவருக்காக சவூதி மன்னரே முன் வந்து சுமார் 6,53,000 சவூதி ரியால்கள் குருதிப்பணம் செலுத்தியதால் அவர் விடுவிக்கப்பட்டார்.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சலீம் பாஷா சவுதியில் கமீஸ் முசைக் எனும் நகருக்கு கடந்த 2004ஆம் ஆண்டு ஓட்டுநர் பணிக்கு வந்தார்.
கட்டுமான கற்கள் தயாரிப்பு நிறுவனத்தில் பணி செய்த அவருடைய வாழ்வில் அந்த விபத்து ஒரு திருப்பு முனையானது.

டிராக்டர் ட்ரெய்லர் ஓட்டிய பாஷா, நெடுஞ்சாலையில் மினி வேன் ஒன்றுடன் பிப் 11, 2006 அன்று மோதியதில் எட்டு சவூதி பெண் ஆசிரியைகளும், ஒரு எகிப்திய வாகன ஓட்டியும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் பாஷா மீது தவறு இருப்பது கண்டறியப்பட்டு பாஷா சிறை வைக்கப்பட்டார்.
திட்டமிடாமல் விபத்தாக நிகழ்ந்த மரணங்கள் என்பதால் குருதிப் பணம் கொடுத்தால் பாஷா விடுதலை செய்யப்படலாம் என்ற நிலை ஏற்பட்டது.
மாதச் சம்பளம் சவூதி ரியால்கள் 1,200 மட்டுமே பெற இந்தியாவிலிருந்து கடல் கடந்த பாஷாவுக்கு இது மிகவும் மாபெரும் தொகை.
என்ன செய்வது

பாஷாவுக்கு யார் உதவ முன் வருவர் என்று காலம் கழிந்து வந்த நிலையில் எதிர்பாரா திருப்பமாக சவூதி மன்னர் அப்துல்லாஹ்வே அந்தக் குருதிப் பணம் 6,53,000 ரியால்களையும் செலுத்தி பாஷா விடுதலை ஆக வழி கோலியுள்ளார்.
6,53,000 ரியால் என்பது இன்றைய இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு கோடிக்கும் மேலாகும்.

பாஷாவின் விடுதலைக்கு முயற்சி செய்த சக இந்தியரான சமூக சேவகர் அஷ்ரஃப் குட்டிச்செல் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
விடுதலை அடைந்த பாஷா கண்ணில் நீர் மல்க தனது விடுதலைக்கு உதவியவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டதுடன், உடனடியாக மக்கா சென்று உம்ராஹ் என்னும் புனிதக் கடமையை நிறைவேற்றி தனது விடுதலைக்கு உதவிய மன்னருக்காகப் பிரார்த்தித்துக் கொண்டுள்ளார்.
விபத்து நடந்தால் தப்பி ஓடாமலும், உண்மையை ஒப்புக்கொள்வதும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டாமலிருப்பதும் குருதிப் பணம் தந்து விடுதலைப்பெற வழி வகுக்கும் என்றார் சலீம் பாஷா.

நன்றி. kadayanallur.org

குளிர்பானம் வாங்குபவருக்கு தான் பாட்டில் சொந்தம்


சென்னையை சேர்ந்த ஒருவர் பாட்டிலில் விற்கப்படும் குளிர்பானத்தை வாங்கி குடித்துள்ளார் அப்போது அந்த பாட்டில் தவறி கீழே விழுந்து உடைந்து விட்டது.

கடைகாரர் பாட்டிலுக்கு காசு கேட்க்க, குளிர்பானம் வாங்கியவர் கொடுக்கமருக்க இருவருக்கும் இடையில் கலட்டாவாகி போலிஸ் வரை போய் பிரச்சனை கோர்ட் க்கு போனது..

கடைகாரர் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் " ஹோட்டலில் காசு கொடுத்து தான் சாப்பிடுகிறோம் அதற்க்காக அங்கு உணவு பரிமாறப்படும் தட்டு,கிண்ணம்,தண்ணீர் டம்ளர் என எல்லாவற்றையும் நாம் கொண்டு வந்து விட  முடியுமா...அதுபோல தான் குளிர்பானம் வாங்கினால் பாட்டிலை கொண்டு போக முடியாது " என வாதிட்டார்.

எதிர்தரப்பு வழக்கறிஞர் என்ன சாதாரண ஆளா... அவரும் அசராமல் திருப்பி அடித்தார் "ஹோட்டல் சாப்பாடு என்பது பேக்டு ஐட்டம் (அடைக்கப்பட்டு விற்பனை செய்யும் பொருள்) அல்ல.

ஆனால் குளிர்பானம் என்பது பேக்டு ஐட்டம். இது போன்று பேக்டு ஐட்டங்கள் விற்பனைக்கு வரும்போது பேக்கிங்கிற்கும்  சேர்த்து தான் விலை நிர்ணயிக்கப்படுகிறது. குளிர்பானம் வாங்கும் போது பாட்டிலுக்கும் சேர்த்து தான் நாம் விலை கொடுக்கிறோம். எனவே குளிர்பானம் வாங்குபவருக்கே பாட்டில் சொந்தம். மெடிக்கல் சாப்பிலுருந்து ஒயின் சாப் வரை பாட்டிலில் வாங்கபடும் பொருட்கள் பாட்டிலோடுதான் தரப்படுகின்றன" என வாதிட்டார்.

ஏறத்தாழ  ஆறு மாதங்கள் இழுத்தடித்த இந்த வழக்கில் " குளிர்பானம் வாங்குபவருக்கே பாட்டில் சொந்தம்" என தீர்ப்பு வந்தது.

 

Blog Template by YummyLolly.com - RSS icons by ComingUpForAir