Tuesday, 17 September 2013

பாம்புக்கு பால் ஊற்றுவதும், முட்டை வைப்பதும் ஏன் தெரியுமா..?



இதில் ஒரு உண்மை என்னவென்றால் முட்டையையும், பாலையும் பாம்பு குடிக்காது, இது விஞ்ஞான பூர்வமாக ஒத்துகொள்ளபட்ட ஒரு உண்மை.

அப்படினா.. ஏன் அதற்க்கு பாலும், முட்டையும் வைகிறார்கள்?

அதிகமானோருக்கு இதற்க்குவிளக்கம் தெரியாது, இருந்தாலும் இதனை பின்பற்றுவர்.

சரி விசயத்திற்கு வருவோம்.. ஆதிக்காலத்தில் பாம்புகள் மனிதனுக்கு பெரிய பிரச்சனையாக இருந்து வந்தது. ஏனென்றால் பெரும்பாலும் அந்த காலத்தில் மரங்கள், செடிகள் அதிகமாக இருந்ததால் பாம்புகளும் அதிக அளவில் இருந்து மனிதனுக்கு தொந்தரவு செய்து வந்தது.. இருந்தாலும் ஆதி கால மனிதர்கள் பாம்புகளை கொல்ல நினைக்காமல் அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த நினைத்தனர். இதன் விளைவு தான் முட்டையும், பாலும்.

என்ன புரியவில்லையா...? அதாவது..
பாம்புகள் இனப்பெருக்கம் மேற்கொள்ளுவது கொஞ்சம் வித்தியாசம். பெண் பாம்பு தன்னுடைய உடலிலிருந்து ஒருவித வாசனை திரவத்தை (ப்ரோமொன்ஸ் ) வெளிப்படுத்தும். அதனை நுகர்ந்து ஆன் பாம்பு பெண் பாம்பை தேடி வரும். பின்னர் அது ...அது......வேண்டாம் ...சென்ஸார்

ஆகையால் பாலை அதன் மேல் ஊற்றுவதால் பெண் பாம்பின் மேலிருந்து வெளிவரும் அந்த வாசனை கட்டுப்படுத்தப்படுகிறது.  அப்போ முட்டை? முட்டையை பாம்பு கொத்தி உடைத்துவிடும் அதனால் முட்டையிலிருந்து வரும் வாசனையும் அதனை கட்டுப்படுத்தபடுகிறது..

இனிமே... பாம்பு,  பாலும், முட்டையும் சாப்பிடும் என சொல்வீர்கள்...?


Monday, 16 September 2013

தேசிய நாளை(National Day) முன்னிட்டு சவூதியில் 2 நாட்கள் விடுமுறை



சவூதி அரேபியாவின் தேசிய தினத்தை (National Day) முன்னிட்டு செப்டம்பர் 22 மற்றும் 23 ஆகிய தினங்கள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஏற்கனவே வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை வாரவிடுமுறை அமலில் உள்ளது.

சவூதி தேசிய தினம் ஞாயிற்றுக்கிழமை வருவதால் 4 நாட்களுக்கும் விடுமுறை விட சவூதி அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.

 ஆகையால் சவூதி அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்கு 4 நாட்கள் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனங்களை பொறுத்தவரை ஒருநாள் (செப்டம்பர் 23) மட்டுமே விடுமுறையாக இருக்கும்.









Sunday, 15 September 2013

பூனை குறுக்கே போனால்.......


பூனைகள் எப்போதும் குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில் தான் இருக்கும்.

மன்னர்கள் காலத்தில் போருக்கு படை திரட்டிச்செல்லும் வழியில் பூனையை பார்த்தால், இந்த வழியில் குடியிருப்புகள் இருக்கிறது. அங்கே இருக்கும் ஆண்மகன்கள் அனைவரும் போர்களத்திற்கு சென்றிருப்பார்கள் அங்கே சிறுவர்கள், வயதானவர்கள், பெண்கள் மட்டுமே இருப்பார்கள் எனவே இந்த வழியாக சென்றால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்க்காக அவர்கள் வந்த திசையை மாற்றி வேறு திசையில் செல்வார்களாம்.

மேலும் அக்காலத்தில் போக்குவரத்து பெரும்பாலும் குதிரையை பயன்படுத்தினர்.

பூனையை பார்த்தால் குடியுருப்புகள் இருக்கும் என உணர்ந்து, யாரும் அடிபட்டு விடகூடாது என்பதற்காக குதிரையில் மெதுவாக செல்வார்களாம்.

அதனால் தான் பூனை குறுக்கே போனால் அந்த வழியாக செல்லக்கூடாது என்றார்கள்.

நம் முன்னோர்கள் சொல்லி வைத்த இது போன்ற பல விசயங்களை  காரணம் தெரியாமலேயே இன்று வரை கடைப்பிடிக்கிறோம்.

பல விசயங்கள் மூட நம்பிக்கையாகவும் திரிக்கப்பட்டுவிட்டது.

பூனை குறுக்கே போனால் அந்த வழியாக போககூடாது என்ற விஷயத்தை கடைபிடிக்க வேண்டிய அவசியம் தற்போதைய கால கட்டத்தில் தேவை இல்லை.

"இனிமே பூனை குறுக்கே போனா என்ன அர்த்தம்..?"

"அது தூத்துகுடி பக்கம், கன்னியாகுமரி பக்கம் நடந்து போக, போகுதுன்னு அர்த்தம்."

ஆவ்வ்வ் ......

Saturday, 14 September 2013

டி என் பி சி குருப் 2 தேர்வு அறிவிப்பு 2013



டி என் பி சி தேர்வு அறிவிப்பு 2013

மொத்த பணியிடம்: 1064
விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.10.2013
கட்டணம் செலுத்த கடைசி நாள்: 08.10.2013
தேர்வு நடைபெறும் நாள்: 01.12.2013

வணிக வரித்துறை ஆணையர், சார்பதிவாளர் உட்பட 1064 பணியிடங்களுக்கு குருப் 2 தேர்வு நடைபெற உள்ளது.

செப்டம்பர் 5 ம் தேதி முதல் அக்டோபர் 4 ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கீழே கிளிக் பண்ணவும்
http://tnpscexams.net/tnpsc_142013/index.php

இத்தேர்வு 3 கட்டமாக நடைபெறும்.
முதல் நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முக தேர்வு

மேலும் விபரம் அறிய கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் பண்ணவும்

http://www.tnpsc.gov.in/notifications/14_2013_not_eng_ccse_II(Grp_II).pdf

வளைகுடா நாடுகளில் அதிக வருடங்கள் வாழ்பவரா... எச்சரிக்கை!!


வளைகுடா நாடுகளில் வாழ்பவர்கள் பலர் தாங்கள்அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஓவர் டைம் வேலையும் பார்த்து பணம் மட்டுமே குறிக்கோள் என இருப்பார்கள். ஆனால் தங்களது உடல் மற்றும் மனதை பற்றி கவலை கொள்ளாமல் இருப்பார்கள். சரியான, சத்தான உணவு உண்ணாமை, உடற்பயிற்சி செய்யாமை போன்றவற்றாலும், மேலும் வளைகுடா நாடுகளில் தட்பவெப்ப நிலைபடி அங்கு காற்றின் ஈரப்பதம் குறைவு, பிராண வாயும் குறைவு இதனால் அதிகமானவர்களுக்கு  மூச்சு திணறல், ஹார்ட் அட்டாக் மற்றும் அலர்ஜி ஏற்படுகிறது. சாப்பிடும் உணவுகளில் அதிக பதபடுத்தபட்ட கொழுப்பு உள்ளது இதனால் ரத்தகொதிப்பு, கொலஸ்ட்ரால், சுகர் என்று ஏதாவது வர வாய்ப்பு உள்ளது. மேலும் அதிகமானோர் தண்ணீரை விட கோககோலா  மற்றும் பெப்ஸி அதிகமாக குடிப்பர் இதனால் சுகர் எளிதாக வந்து விடும் எலும்பும் பலம் இழக்கும்.

எனவே சத்தான உணவுகளை நீங்களே சமைத்து சாப்பிடுங்கள், அதிகமான அளவில் பழங்கள் சாப்பிடுங்கள், தயிர், மோர் அதிகம் உணவில் சேர்க்கலாம். காலை உணவை தவிர்க்காமல் ஓட்ஸ், கார்ன்பிளாக்ஸ் போன்றவைகளையும் வாங்கி சாப்பிடலாம். தினமும் ஒரு மணி நேரம் குறைந்தது அல்லது  அரை மணி நேரமாவது நடைபயிற்சி செய்ய முயலுங்கள், இதனால் உடம்பில் ரத்த ஓட்டம் வேகமாக ஏற்பட்டு மூளை மற்றும் மனசை வலுவடையும்.  வேலைநேரத்தில் பதட்டத்துடன், மன இறுக்கத்துடன் வேலை செய்யாமல் ரிலாக்ஸாக வேலை செய்யுங்கள்.

இவ்வாரெல்லாம் தொடர்ச்சியாக செய்து வந்தால் நீங்களே உணர முடியும் உங்களுடைய உடம்பு மற்றும் மனசை பற்றி.

 

Blog Template by YummyLolly.com - RSS icons by ComingUpForAir