Friday, 13 September 2013

தேசிய உணவு பாதுகாப்பு மசோதா ஒரு பார்வை


இந்திய ஜனதொகையில் 67 % பேருக்கு மானிய விலையில் உணவு தானியங்களை வழங்க வகை செய்யும் ஒரு மசோதா தான் தேசிய உணவு பாதுகாப்பு மசோதா.

கிலோ 3 ரூபாய் என்ற அடிப்படையில் மாதம் 5 கிலோ அரிசி அல்லது
கிலோ 2 ரூபாய் என்ற அடிப்படையில் மாதம் 5 கிலோ கோதுமை அல்லது
கிலோ 1 ரூபாய் என்ற அடிப்படையில் மாதம் 5 கிலோ தானியம் வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு வழங்கப்படும்.

இதனை ரேஷன்கடைகள் மூலம் விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
ஆனால் இந்த மசோதா நல்லதா.. அல்லது கெட்டதா என அறிய முடியவில்லை. ஏனெனில் இந்த திட்டம் மூலம் மத்திய மற்றும் மாநில அரசிடமிருக்கும் புழுத்து போன அரிசி, உணவு தானியங்களை விரைவில் விற்பதற்காகவா அல்லது கையில் இருக்கின்ற வற்றை விரைவில் விற்று விட்டு அனைத்து ரேஷன் கடைகளையும் மூடி விட்டு அந்நிய முதலிட்டை விட போகிறதா? என தெரியவில்லை.

Wednesday, 11 September 2013

வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைன் மூலம் பெற



கீழே உள்ள இணையதள முகவரிக்கு சென்று உங்களுடைய கைபேசி எண் மற்றும் உங்களது மின் அஞ்சல் முகவரி கொடுக்கவும். உங்களுடைய கைபேசிக்கு "verification code" மெசேஜ் வரும். அதனை இணையதளத்தில் கொடுப்பதன் மூலம் ஒரு கோரிக்கை படிவம் வரும் அதில் கேட்கப்பட்டுள்ள விபரங்களை கொடுத்த பின்னர் save என்பதை கிளிக் செய்தவுடன் உங்களுடைய கைபேசிக்கு confirmation மெசேஜ் வரும். இனி நீங்கள் "online application" என்பதை கிளிக் செய்து விபரங்களை கொடுத்த பின்னர் உங்களுடைய விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு தேர்தல் அதிகாரி உங்களுடைய இல்லத்திற்கு வருகை தந்து சரிபார்த்து அனைத்தும் சரியாக இருக்கும் பட்ச்சத்தில் உங்களுடைய விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டு சில நாட்களில் உங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்

http://eci-citizenservices.nic.in/default.aspx

அல்லது
http://www.elections.tn.gov.in/eregistration/E_Registration.aspx


இந்திய தண்டனைச் சட்டங்கள்


இந்திய தண்டனைச் சட்டம் / குற்றங்களின் வகைப்பாடுகள்:
இ.பி.கோ. 1 முதல் 5 வரை அறிமுகம்
இ.பி.கோ. 6 முதல் 52 வரை பொது விளக்கங்கள்
இ.பி.கோ. 53 முதல் 75 வரை தண்டனைகள்
இ.பி.கோ. 76 முதல் 106 வரை தனியார் பாது காப்பு உரிமைகளின் பொது விதிவிலக்குகள்
இ.பி.கோ. 107 முதல் 120 வரை உடந்தை
இ.பி.கோ. 120எ முதல் 120பி வரை குற்றவியல் சதி
இ.பி.கோ. 131 முதல் 140 வரை இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை தொடர்பான குற்றங்கள்
இ.பி.கோ. 141 முதல் 160 வரை பொதுமக்களின் அமைதிக்கு எதி ரான குற்றங்கள்
இ.பி.கோ. 161 முதல் 171 வரை அரசு ஊழியர்கள் தொடர்பான குற்றங்கள்
இ.பி.கோ. 172 முதல் 190 வரை அரசாங்க ஊழியர்களின் சட்டப் பூர்வ ஆணையம் தொடர்பான அவமதிப்புகள்
இ.பி.கோ. 191 முதல் 229 வரை பொது நீதிக்கு எதிரான பொய்யான ஆதாரங்கள் மற்றும் குற்றங்கள்
இ.பி.கோ. 230 முதல் 263 வரை நாணயம் மற்றும் அரசு அஞ்சல் தலைகள் தொடர்பான குற்றங்கள்
இ.பி.கோ. 264 முதல் 267 வரை பொது நீதிக்கு எதிரான பொய்யானஆதாரங்கள் மற்றும் குற்றங்கள்
இ.பி.கோ. 268 முதல் 294 வரை பொது சுகாதாரம், பாதுகாப்பு, வசதி, நாகரீகம் மற்றும் ஒழுக்கம் பாதிக்கும் குற்றங்கள்
இ.பி.கோ. 295 முதல் 298 வரை பொது மதம் தொடர்பான குற்றங் கள்
இ.பி.கோ. 299 முதல் 377 வரை 1. கொலை குற்றத்துக்குரிய படுகொலை
(பிரிவு 299 முதல் 311) உள்ளிட்ட வாழ்க்கை பாதிக்கச் செய்கின்ற குற்றங்களை
2. கருத்சிதைவு தொடர்பான குற்றங்;கள் (பிரிவு 312 முதல் 318)
3.காயப்படுத்துதல் (பிரிவு 319 முதல் 338)
4. தவறான கட்டுப்பாடு மற்றும் தவறான வரையறை(பிரிவு 339 முதல் 348)
5.குற்றவியல் தாக்குதல் (பிரிவு 349 முதல் 358)
6.கடத்தல் அடிமைப்படுத்துதல் மற்றும் கட்டாய தொழில் வலியுறுத் தல் (பிரிவு 359 முதல் 374)
7. கற்பழிப்பு உள்ளிட்ட பாலியல் குற்றங்கள் (பிரிவு 375 முதல் 376)
இ.பி.கோ. பிரிவு 299 முதல் 377 மனித உடல் பாதிக்கும் குற்றங்கள்:
1. மனித உடல் பாதிக்கும் குற்றங்கள் அதாவது கொலை, குற்றத்துக் குரிய படுகொலை உள்ளிட்ட வாழ்க்கை பாதிக்கச்செய்கின்ற குற்ற ங்களுக்கு (பிரிவு 299 முதல் 311)
2. கருச்சிதைவு தொடர்பான குற்றங்களுக்கு (பிரிவு 312 முதல் 318)
3. ஒருவரை காயப்படுத்துதல் (பிரிவு 319 முதல் 338)
4. தவறான கட்டுப்பாடு மற்றும் தவறான வரையறை (பிரிவு 339 348 போன்ற)
5. குற்றவியல் தாக்குதல் (பிரிவு 349 முதல் 358)
6. கடத்தல், அடிமைப்படுத்துதல் மற்றும் கட்டாய தொழில் செய்ய வலியுறுத்தல் (பிரிவு 359 முதல் 374)
7. கற்பழிப்பு உள்ளிட்ட பாலியல் குற்றங்கள் (பிரிவு 375 முதல் 376)
8. செயற்கை குற்றங்களுக்கு (பிரிவு 377)
இ.பி.கோ. பிரிவு 378 முதல் 462 சொத்து தொடர்பான குற்றங்கள்:
1. திருட்டு (பிரிவு 378 முதல் 382)
2. பலாத்காரம் (பிரிவு 383 முதல் 389)
3. திருட்டு மற்றும் கொள்ளை (பிரிவு 390 முதல் 402)
4. சொத்து குற்றவியல் மோசடி (பிரிவு 403 முதல் 404)
5. குற்றவியல் நம்பிக்கை துரோகம் (பிரிவு 405 முதல் 409)
6.திருடிய சொத்து பெறுவது (பிரிவு 410 முதல் 414)
7. ஏமாற்றுதல் (பிரிவு 415 முதல் 420)
8. மோசடி செயல்கள் மற்றும் சொத்து அபகரித்தல் (பிரிவு 421 முதல் 424)
9. குறும்புகள் (பிரிவு 425 முதல் 440)
10. குற்ற மீறல் பற்றிய செயல்கள் (பிரிவு 441 முதல் 464)
ஆவணங்கள் மற்றும் சொத்து தொடர்பான குற்றங்கள் (பிரிவு 463 முதல் 489 வரை)
சொத்து (பிரிவு 478 முதல் 489)
நாணய குறிப்புகள் மற்றும் வங்கி அறிக்கை (பிரிவு 489எ வேண்டும் 489இ)
இ.பி.கோ. பிரிவு 490 முதல் 492 வரை சேவை ஒப்பந்தங்கள் குறித்த சட்ட மீறல்கள்:
கணவன் அல்லது கணவனின் உறவினரால் துன்புறுத்தப்படுதல் (பிரிவு 498 (a) (குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம்ு)
மான நஷ்ட வழக்குகள் (பிரிவு 499 முதல்502 வரை)
சட்ட விரோத மிரட்டல் அவமதிப்பு (பிரிவு 503 முதல் 510 வரை)
குற்றம் செய்ய முயல்வது. (பிரிவு 511)
சட்ட சீர்திருத்தங்கள்
1, பிரிவு 377 இந்தியாவில் பாலியல் சிறுபான்மையினர் நியாயமான உரிமைகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டு வந்தன. தற்போது அந்த பகுதியில் எயிட்ஸ் நோய் கட்டுப்பாட்டை கையாள்வதில் மிக பெரியதடையாக இருந்து வந்தது. ஆனால் ஜூலை 2 2009 முதல் டில்லி உயர் நீதி மன்றம் இப்பகுதியில் ஒரு முற்போக்கா ன விளக்கம் கொடுத்தது. இந்த பிரிவில் இரண்டு ஆண்கள் இடையே பரஸ்ப்பர ஒப்புதலுள்ள பாலியல் உடலுறவு சட்டம் தண்டிக்க பயன்படுத்த முடியாது என்றது.
2. பிரிவு 309 தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு தோல்வி அடைந்தவர்களை தண்டனை வழங்குகிறது. மாறாக பொருத்தமான ஆலோசனை வழங்குவதே சிறந்தது என்பதே பலரின் கருத்து.
3 பிரிவு 497ன் கீழ் மற்றொரு நபர்கள் மனைவியுடன் ஒபபுதலுள்ள உடலுறவு வைத்துக் கொள்ளும் ஆண்களை தண்டிக்கிறது.

Monday, 2 September 2013

வளைகுடா நாடுகளில் ஏதாவது குற்றப்பின்னணியில் ஈடுபட்டு Exit முடித்து சென்றவர்கள் மீண்டும் சவூதி வந்தால் திரும்ப கைது செய்யப்படுவார்கள்


தாயகத்திலிருந்து சவூதி வரும் சகோதரர்களின் கவனத்திற்கு!

வளைகுடாவில் எதவாது குற்றப்பிண்ணனியில் ஈடுபட்டு காவல்துறை மூலம் கைது செய்து (deportation Center) தர்ஹீல் மூலம் தாயகம் திருப்பி அனுப்பப்பட்டவர்கள், மீண்டும் வளைகுடா நாட்டிற்கு குறிப்பாக சவூதி அரேபியா வந்தால், விமான நிலையத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்படுகிறார்கள் ஆகவே வளைகுடா நாடுகளில் ஏதேனும் காரணமாக பல ஆண்டுகளுக்கு முன் குற்றச் செயல் காரணமாக நாடு திருப்பி அனுப்பப்பட்டவர்கள் மீண்டும் வர முயற்ச்சிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கடந்த சில மாதம் முன்பு இந்த தகவலை தூதரக மீட்டிங்கில் அதிகாரிகள் அறிவுருத்தியதை கேட்டுள்ளேன்.

தற்போதைய நிலவரப்படி இந்த மாதிரியான குற்றப்பிண்ணனியில் உள்ளவர்கள் ரியாத் வந்ததில் சிலர் சிறையில் இருக்கிறார்கள். உதவி கேட்டு என்னிடம் அந்த சகோதரர்கள் தொலைபேசியில் பேசி உள்ளார்கள். (உறுதி செய்யப்பட்டதகவல்கள் இவை)

நேற்றைய தினம் ரியாத் வந்த ஏர்லங்கா விமானத்தில் 6 பேர் இந்த குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்ற தகவலை கைது செய்யப்பட்டவரின் உறவினர் எனக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தி உரிய நடவடிக்கைக்கு உதவி கோரி உள்ளார்.

நேற்று கைது செய்யப்பட்ட ஒருவரின் குற்றம் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் நீலப்படம் (ஆபாசப்படம்) பார்த்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டவர்.

குற்றத்தின் தன்மை, எத்தனை ஆண்டுகளுக்கு முன் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

ஆகவே சவூதி அரேபியா வரும் சகோதரர்கள் கவனத்தில் கொள்ளவும்.
நன்றி Hussain Ghani-Riyadh.

Sunday, 1 September 2013

இந்த வருடம் அனுமதி இல்லாமல் ஹஜ்ஜ் செய்பவர்களுக்கு எச்சரிக்கை!!


தற்போது புனித மக்காவில் கட்டிட விரிவாக்க வேலை நடை பெறுவதால் இந்த வருட புனித ஹஜ்ஜில் ஈடுபடுபவர்களுக்கு இட நெருக்கடி ஏற்படும். இதனால் சவூதி  அரசாங்கம் இந்த வருடம் மற்ற நாடுகளிலுருந்து  வரும் ஹஜ்ஜ் பயணிகளை   20 % குறைத்து உள்ளது.

எனவே சவூதியில் வசிக்கும் நபர்கள் (ஹஜ்ஜ் பேப்பர்) அனுமதியில்லாமல் ஹஜ்ஜ் செய்ய புறப்படுபவர்களை சவூதி போலிஸ் அவர்களை பிடித்து ஒரு வருடம் சிறை தண்டனையும் பின்னர் அவர்களை நாட்டை விட்டு  வெளியேற்றவும் உத்தர விடப்பட்டுள்ளது.

இக்காமா முடிவடைந்த நிலையிலும், ஹுருஜ் அடித்து தாய் நாடு செல்ல இருப்பவர்களும் இந்த வருடம் ஹஜ்ஜ் செய்ய முற்பட்டால் அவர்களை உடனே நாட்டை விட்டு வெளியேற்றவும், 10 ஆண்டு காலம் அவர்கள் சவூதி வர முடியாத நிலையும் ஏற்படும்.

புனித மக்கா நகரில் வாகனங்களில் போதை போன்ற பொருட்களை கொண்டு சென்றால், அந்த வாகன உரிமையாளரை பிடித்து சிறையில் அடைக்கவும், அந்த வாகனத்தை ஜப்தி செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


எனவே ஹஜ்ஜ் செய்ய முற்படுபவர்கள் ஹஜ்ஜ் பேப்பர் பெற்றுக்கொண்டு ஹஜ்ஜ் செய்ய ஈடுபடவும்.  
 

Blog Template by YummyLolly.com - RSS icons by ComingUpForAir