Thursday, 4 July 2013

கடலோர காவல்படையில் பணிவாய்ப்பு - Opportunities in the Coast Guard 2013 July Updates

இந்திய கடலோர காவல்படையில் நேவிக் எனப்படும் பொதுப் பணியாளர் காலிப் பணியிடங்களில் சேர விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நேவிக் பணியில் சேர வி
ரும்புவோர் கொள்குறி வகையிலான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
உடல்தகுதித் தேர்வு, மருத்துவ ரீதியிலான உடல் தகுதித்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ச்சி முடிவு செய்யப்படும்.
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு தரவரிசையில் உரிய வெயிட்டேஜ் மதிப்பெண்கள் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

காலிப் பணியிடங்களின் அடிப்படையில் தகுதியுடைய தேர்வர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டுwww.joinindiancoastguard.gov.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்படும்.
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு, கடலோர காவல் படையில் பணிபுரியத் தேவையான அடிப்படைப் பயிற்சிகள் 2014ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அளிக்கப்படும். கடல் சார்ந்த பயிற்சிகளும், பணிபுரிய உள்ள பிரிவிற்கு ஏற்ற கூடுதல் பயிற்சிகளும் வழங்கப்படும்.

இந்திய திபெத்திய எல்லைப் பாதுகாப்பு படையில் 608 மருத்துவ பணிகள் - Indo Tibetan Border Security Force medical Recruitment July 2013 Updates

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய திபெத்திய எல்லைப் பாதுகாப்பு படையில் 608 மருத்துவ காலிப் பணியிடகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
எல்லைப் பாதுகாப்பு படை, சி.ஆர்.பி.எஃப் (CRPF) போன்ற பாதுகாப்பு படைகளில் சிறப்பு மருத்துவ அதிகாரிக்கான பணிகளில் டெபுட்டி கமாண்டண்ட் (Deputy Commandant)-ஆக பணியாற்ற 209 காலிப் பணியிடங்கள் உள்ளன. மருத்துவ அதிகாரியாக பணியாற்ற 397 காலியிடங்கள் இருக்கின்றன.
டெண்டல் சர்ஜன் (Dental Surgeon) பணிகளுக்கு 2 இடங்களும் காலியாக உள்ளன. ஆண்கள் குறைந்தது 157 புள்ளி 5 சென்டிமீட்டரும், பெண்கள் குறைந்தது 142 சென்டிமீட்டரும் உயரம் இருக்க வேண்டியது அவசியம். பார்வைத் திறன் உள்ளிட்ட உடல் தகுதி மற்றும் வெயிட்டேஜ் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்திய-திபெத்திய எல்லைக் காவல் படையில் விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள்:
இந்திய-திபெத்திய எல்லைக் காவல் படையில் உள்ள மருத்துவ காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள் குறித்து இப்போது பார்க்கலாம்.
சிறப்பு மருத்துவ அதிகாரிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் மருத்துவ பட்டத்துடன், தொடர்புடைய துறையில் டிப்ளமோ அல்லது முதுநிலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மருத்துவ அதிகாரியாக, மருத்துவ பட்டம் பெற்றிருக்கவும். டெண்டல் சர்ஜன் (Dental Surgeon) பணிக்கு, குறைந்தது 60 சதவிகித மதிப்பெண்களுடன் இளநிலை பல் மருத்துவப் பட்டம் முடித்திருக்கவும். அனைத்து பணிகளுக்குமே இன்டெர்ன்ஷிப் சென்ற அனுபவம் இருக்க வேண்டும்.
உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நேர்காணல் நடத்தப்படும். இளநிலை பட்டம் மற்றும் முதுநிலை டிப்ளமாவில் பெறும் மதிப்பெண்கள், பணி அனுபவம் மற்றும் நேர்காணலில் பெறும் மதிப்பெண்களை கொண்டு 200 மதிப்பெண்களுக்கு கணக்கிடப்படும். தேர்வு செய்யப்படுபவர்களின் மெரிட் (Merit) பட்டியலை மருத்துவ அதிகாரிகள் தேர்வு வாரியம் வெளியிடும். மதிப்பெண்கள் மற்றும் இடஒதுக்கீட்டின் கீழ் இந்த மெரிட் பட்டியல் அமையும்.
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
இந்திய - திபெத்திய பாதுகாப்புப் படை பிரிவில் உள்ள காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி என்பதை இப்போது பார்க்கலாம்.
தேர்வு செய்யப்படும் மருத்துவர்கள் அனைவரும் குறைந்தது 10 ஆண்டுகள் பணியில் நீடித்து இருக்க வேண்டும். அனைத்து பொதுப் பிரிவு விண்ணப்பதாரர்களும் Accounts Officer, Directorate General, ITBP, NewDelhi-03 என்ற பெயரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் காசோலை அல்லது வரைவோலை எடுத்து அனுப்பவும்.
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பெண்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. ஜூலை 13-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி, The Deputy Inspector General, Member Secretary, Medical Officers Selection Board, Directorate General, ITBP, Block-2, CGO Complex, Lodhi Road, NewDelhi - 110 003.

Wednesday, 3 July 2013

சமோசா போண்டா பஜ்ஜிக்கு புற்றுநோய் இலவசம்


கோவை அரசு மருத்துவமனைக்கு வந்த வயிற்றுப் புற்றுநோயாளிகளிடம் அஃப்ரோஷ் நயீம் என்ற மாணவர் எடுத்த புள்ளியியலின் படி மேற்படி நோயாளிகளில் பெரும்பாலானோர் தினம் தோறும் பஜ்ஜி,வடை சாப்பிடுபவர்களாய் இருந்திருக்கிறார்கள்.சில பேர் புகையிலை பயன்படுத்து பவர்களாகவும், சிலர் புகைபிடிப்பவர் களாகவும் இருந்திருக்கின்றார்கள்.

டீக்கடைகளில் விற்கப்படும் போண்டா, பஜ்ஜி, வடைகள் ரீயூஸ்என்று அழைக்கப்படும் முன்பே பயன்படுத்திய எண்ணெய் கலந்து தயார் செய்யப்பட்டவை என்கிறது ஒரு புள்ளி விபரம்.

பெரும்பாலான டீக்கடைகளில் பாலை சுட வைப்பதே இல்லை. வடை, போண்டா, பஜ்ஜி, சமோசா போன்ற எண்ணெய் பதார்த்தங்கள் பயன்படுத்திய எண்ணெயுடன்,புதிய எண்ணெயை சேர்த்துத்தான் தயார் செய்கின்றார்கள்.அதுமட்டுமல்ல சுவீட் கடைகளிலும்கூட இதே வேலையைத்தான் செய்கின்றார்கள்.

யார் யாரெல்லாம் தினம் தோறும் டீக்கடையில் பஜ்ஜி, போண்டா சாப்பிடுகின்றார்களோ அவர்களுக்கு வரக்கூடிய நோய் “வயிற்றுப் புற்றுநோய்”. நோய் வேண்டுமா இல்லையா என்பதை சாப்பிடுபவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். தெரிந்தவர்களிடம் சொல்லுங்கள்.

Tuesday, 2 July 2013

சவூதி அரசால் அறிவிக்கப்பட்ட காலக்கெடு நீட்டிக்கப் பட்டது






சவூதி  அரசால் அறிவிக்கப்பட்ட சலுகை காலம் 03.07.2013 நாளையுடன் முடிவடைகின்றது, சலுகைகளை பயன்படுத்தி தங்கள் நிலையை சரி செய்து கொள்ளுமாறு நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டவர்களை சவுதி உள்துறை, தொழிலாளர் அமைச்சகங்கள் கேட்டு கொள்கின்றனர். சலுகை காலம் முடிந்த பிறகு உடனே அதிகாரிகள் ஆய்வு பணிகளை மேற் கொண்டு சட்டத்தை மீறும் நிறுவனங்கள், வெளிநாட்டவர்கள் மீது நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என அறிவித்தது



இந்நிலையில், கிங் அப்துல்லா ஒப்புதலின் பெயரில் சவூதி உள்துறை அமைச்சகம் இந்த காலக்கொடுவை மேலும் 3 மாதம் (நவம்பர் 4, 2013) வரை நீடிக்க இன்று உத்தரவிடப்பட்டது.

லஞ்சத்தை ஒழிக்க பூஜ்ஜியம் ரூபாய் நோட்






இந்தியாவை சேர்ந்த பிசிக்ஸ் புரபசர் ஒருவருக்கு டக்கென ஒரு ஐடியா உதித்தது..லஞ்சத்தை ஒழிக்க ஏன் பூஜ்ஜியம் ரூபாய் நோட்டை தயார் செய்ய கூடாது என நினைத்தார்.உடனே உருவாக்கியும் விட்டார்.


ப்ரின்டிங் பிரஸ்ஸில் இதை கலர் ப்ரின்ட் எடுத்தார். லஞ்சம் கேட்கும் அரசு அதிகாரிகளிடம் இந்த நோட்டை லஞ்சமாக கொடுக்க சொல்லி நண்பர்கள், உறவினர்களிடம் சொன்னார். இந்த கான்செப்டுக்கு பலத்த வரவேற்பு இருந்தது.அவர் இதை யதேச்சையாய் ஐந்தாம் தூண் என்ற என்.ஜி.ஓ அமைப்பிடம் சொன்னார்.

அந்த அமைப்பின் தலைவர் விஜய் ஆனந்த் என்பவருக்கு இந்த ஐடியா பிடித்து போக உடனே அவர் 25,000 நோட்டுகளை அச்சடித்தார்.அதை வட இந்தியாவெங்கும் வினியோகம் செய்ய நோட்டுகள் பரபரவென மக்களிடையே பரவின.அதன் பின் நோட்டுகளை மக்கள் அதிக அளவில் கேட்க இதுவரை சுமார் பத்துலட்சம் நோட்டுக்களை அச்சடித்து மக்களிடையே வினியோகித்துள்ளது இந்த அமைப்பு

ரெவென்யு டிபார்ட்மெண்டில் லஞ்சம் கேட்டதால் நடையாய் நடந்து அலுத்த பெண் ஒருவர் லஞ்சம் கேட்ட அதிகாரி ஒருவரிடம் இந்த நோட்டை கொடுத்தார்.உடனே அந்த அதிகாரி சீட்டை விட்டு எழுந்து நின்று இரு கைகளையும் கூப்பி இவரிடம் மன்னிப்பு கேட்டு வருடகணக்கில் நகராமல் இருந்த பைலை முடித்து கொடுத்தார்.இந்த நோட்டு இத்தனை பெரிய மாஜிக்கை ஏற்படுத்தும் என அந்த அம்மையார் நம்பவே இல்லை.

ஏன் இந்த நோட்டு வட இந்தியாவில் இத்தனை பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது? லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் இந்த நோட்டை பார்த்தால் முதலில் பயந்துவிடுகிறார்கள் என்கிறது உலகவங்கி.அடுத்து லஞ்சம் என்பது சட்டபடி தண்டனை கிடைக்கும் குற்றம்.லஞ்சம் கொடுக்க வசதியற்ற மக்கள் இழப்பதற்கு ஏதுமில்லை என்ர நிலையில் இந்த நோட்டை தருகின்றனர். அலுவலகங்களில் இப்படி ஏராளமான ஏழை எளிய மக்கள் இந்த நோட்டுக்களை அளித்து வருவதால் அதிர்ந்து போன அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதை நிறுத்தி விட்டு சொன்ன வேலையை செய்து தருகின்றனர்

இந்த பூஜ்ஜியம் ரூபாய் நோட்டு கான்செப்ட் தமிழ்நாட்டிலும் கிடைக்கின்றது.

இந்த 9094024005 .(FACT INDIA) கைபேசி எண்ணில் தொடர்புகொண்டால்  இந்த பூஜ்ஜியம் ரூபாய் நோட்டு கிடைக்கும் என நினைக்கிறேன்.........

 

Blog Template by YummyLolly.com - RSS icons by ComingUpForAir